71
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் நியமனக் கமிட்டி ஒன்றும், கல்விக் கமிட்டி ஒன்றும் பொதுக் காரியங்களுக்கான கமிட்டி ஒன்றும் ஏற்படுத்தப்படும். அதைப் போன்ற இதர கமிட்டிகளையும் கவுன்ஸில் ஏற்படுத்தலாம். சட்டத்தின் பிரகாரம், கடமைகளையும் அலுவல்களையும் திறமையாக நிறைவேற்றுவதற்கு மேற்படி கமிட்டிகள் அவசியமாகின்றன. அம்மாதிரியான கமிட்டிகளை நியமிக்குமாறு பஞ்சாய்த்து யூனியன் கவுன்விலை அரசாங்கம் கேட்டுக் கொள்ளும்.
18. சட்டபூர்வமான கமிட்டிகள் எத்தனை?
பூர்வமில்லாத கமிட்டிகள் எத்தனை ?
நியமனக் கமிட்டி, கல்விக் கமிட்டி, பொதுக்கா கான கமிட்டி ஆகிய மூன்றும் சட்டபூர்வமானவை. சட்டபூர்வ மில்லாதவை.
19. கமிட்டிகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் நியமனக் கமிட்டி ஒன்று இருக்க வேண்டும். கவுன்சில் சேர்மன், பஞ்சாயத்து யூனியன் கமிஷனர், ஆண்டுதோறும் கவுன்லிலால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அங்கத்தினர் ஆகிய மூவரையும் கொண்டதாக இக்கமிட்டி இருக்கும். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் சேர்மனே இந்தக் கமிட்டியின் தலைவராக இருப்டார்.
இதர கமிட்டிகளில், அங்கத்தினர்களின் எண்ணிக்கையை கவுன்ஸிலே முடிவுசெய்து கொள்ளலாம். உத்தியோக முறையில் எல்லாக் கமிட்டிகளிலும் கவுன்ஸில் சேர்மன் அங்கத்தினராயிருப்பார். கமிட்டிகளுக்கு அங்கத்தினர்கள், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
கவுன்ஸில் அங்கத்தினர்கள் அல்லாதவர்களையும் மேற்படி கமிட்டிகளில், கூட்டு அங்கத்தினர்களாகச் சேர்த்துக்கொள்வ தற்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு அதிகாரம் உண்டு. ஆளுல், சேர்த்துக் கொள்ளப்படும் கூட்டு அங்கத் தினர்களின் எண்ணிக்கை, கமிட்டியிலுள்ள கவுன்ஸில் அங்கத் தினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் இருக்கக்கூடாது.