86
பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின்முன் அத்தகைய ராஜினாமா வைக்கப்படும் தேதியிலிருந்து அது அமுலுக்கு வரும்.
11. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அலுவல்
என்ன ?
அங்கத்தினர் பஞ்சாயத்து யூனியன் வேலையைச் செய் வதில் ஏற்படுகிற எந்த ஒர் அசிரத்தையை அல்லது பஞ்சா யத்து யூனியனுக்கு ஏற்படும் எந்த ஒரு வீண் செலவை, அல்லது எந்த ஒரு இடத்தின் தேவைகளைக் கமிஷனரின் கவனத்திற்குக் கொண்டுவந்து அபிவிருத்திக்கான ஆலோசனை கூறுதல் :
கவுன்சிலின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மீது தீர்மானங்களைக் கொண்டு வருவதும் தலைவரை வெளிப் படையாகக் கேள்விகள் கேட்பதும் ;
ஒவ்வொரு அங்கத்தினருக்கும் அலுவல் நேரத்தில் பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலின் தஸ்தாவேஜூகளேப் பார்வை யிடும் உரிமை உண்டு. எழுத்து மூலம் கமிஷனர் ஆட்சேபனை தெரிவிப்பாராளுல் போதுமான முன் அறிவிப்பு கொடுத்து விட்டுப் பார்வை இடலாம்.
12. கமிஷனரின் அலுவல்கள் எவை?
ஒவ்வொரு யூனியனுக்கும் அரசாங்கம் ஒரு கமிஷனரை நியமித்திருக்கிறது. அவர் சமுதாய அபிவிருத்தி தேசிய விஸ்தரிப்புச் சேவை திட்டத்தின் படி நியமிக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரி ஆவார். அவருடைய சம்பளமும் அலவன்ஸ் ம் அரசாங்கத்தின் பற்றுக் கணக்கில் சேரும். கமிஷனர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் முறைகள், அவர்க ளுடைய ஊழியம், சம்பளம், அலவன்ஸ் நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குக் கட்டுப்பாடு நடத்தை ஆகியவற்றை முறைப் படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு.
கமிஷனர் கவுன்சிலின் கூட்டங்களில் அல்லது அதன் கமிட்டியினுடைய கூட்டங்களில் ஆஜராகி இருப்பது ; அதன் விவாதங்களில் கலந்து கொள்வது எந்த ஒரு தீர்மானத் தையும் கொண்டு வராமல் இருப்பதும் ஒட்டுச் செய்யாமல் இருப்பதும் ;