94
புத்தகத்தில் பதிவு செய்து தலைமை வகிக்கும் அங்கத்தின ரிாவது அவர் ஆஜராக இல்லாவிடில், அங்கு ஆஜராகியுள்ள சில அங்கத்தினர்கள்ாவது கையொப்பம் இடவேண்டும்.
பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், கூட்டங்களின் குறிப்புகளை நியாயமான நேரங்கள் எல்லாவற்றிலும் வரி செலுத்துகிறவர்கள் கட்டணம் செலுத்தாமல் பார்வை விடலாம்.
20. நடவடிக்கை குறிப்புகளை யாருக்கு அனுப்புவது?
பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத் தின் நடவடிக்கை குறிப்புகளின் நகல் ஒன்றையும், அந்தக் கூட்டத்தில் ஆஜராகியிருந்த எந்த ஓர் அங்கத்தினராவது கூட்டம் நடந்து 48 மணி நேர்த்திற்குள் அந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளைப்பற்றி அனுப்பி வைக்கிற ஆட்சேபனைக் குறிப்புகளின் நகலையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவர், ஜில்லா அபிவிருத்திக் கவுன்சிலின் காரியதரிசிக்கு அனுப்ப வேண்டும்.
ஜில்லா அபிவிருத்திக் கவுன்சிலின் காரியதரிசி அந்த நடவடிக்கைகளின் நகல்களேக் கலெக்டருக்கும் சூட்டு அபி விருத்திக் கமிஷனருக்கும் செய்தி தெரிவிக்கும் பொருட்டு, அனுப்பி வைக்க வேண்டும் ; மற்றும் கலெக்டரின் சம்மதத் தின் பேரில் பொருத்தமுள்ள (சாராம்சங்களை) சுருக்கங்க்ள் முக்கியமான ஜில்லா அதிகாரிகளுக்காவது ஜில்லா அளவிலோ அல்லது அரசாங்க அளவிலோ மேற்கொண்டு நடவடிக்கை தேவையாய் இருக்கும் சந்தர்ப்பத்தில் அனுப்பி வைக்க வேண்டும்,
21. கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது யார்?
ஒவ்வொரு கூட்டத்திலும் தலைவராவது அவர் வரா விட்டால் துணைத் தலைவராவது; இருவரும் வராத சமயத்தில் அந்தத் சூட்டத்தில் வந்திருக்கும் அங்கத்தினர்களால் அந்தச் சமயத்திற்குத் தலைமை வகிக்கும் பொருட்டுத் தேர்ந்தெடுக் கப்படும் ஓர் அங்கத்தினராவது தலைமை வகிக்க வேண்டும். ஒரு துணைத் தலைவருக்கோ அல்லது அந்தக் கூட்டத்தில் தலைமை வகிக்கும் ஒர் அங்கத்தினருக்கோ இவர்களில் எவருக் கும் தலைவருக்கு உள்ள் எல்லா அதிகாரங்களும் உண்டு. r