115
கிடைக்கும் வருமானம் ; (10) சாலைகளையும் சாலை ஓரங் களையும் தற்காலிகமாக உபயோகிப்பதற்கு லைசென்ஸ்-க் கட்டணம் : (11) மாஜிஸ்திரேட் விதிக்கும் அபராதங்கள் ; {12) ஆக்கிரமிப்புக் கட்டணங்கள்.
55. அரசாங்க மான்ய்ங்கள் எவை ?
சட்ட பூர்வமானவை : நிலத்தீர்வை ; பிரதேச சாலைகள் மான்யம் ; பிரதேச வரி சர் சார்ஜ்; இணையான மான்யம் ; பிரதேச கல்வி மான்யம்.
சட்ட பூர்வம் அல்லாதவை : கிராம வேலைகள் மான்யம்; பள்ளிக்கூட ೭687 மான்யம். முதியோர் எழுத்தறிவு பள்ளிக் கூடங்களை நடத்துவதற்கான மான்யம் ; சமூகக் கல்வி மான்யம் ; அதிகப்படியான கல்வி மான்யம் : தனிப்பட்ட கிராக்கிப்படி மான்யம் ; ஸ்தல நீர்ப்பாசன மான்யம் ; அதிகப் படியான குடிமராமத்து மான்யம் ; மாதர்கள், குழந்தைகள் நல மான்யம் ; தாய்சேய் நல மான்யம் ; கதர், கிராமக் கைத் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக ராஜ்ய கதர், கிராம்க் கைத்தொழில்கள் போர்டிலிருந்து மான்யம்.
கடன்கள் : ராஜ்ய கதர், கிராமக் கைத்தொழில்கள் போர்டுக்குக் கதர் மற்றும் கிராமக் கைத்தொழில்களின் அபி. விருத்திக்காக வேலை நடைபெறுவதற்கான மூலதனம்.
56. பஞ்சாயத்துகளுக்குச் சேரவேண்டிய வரிகள்
எவை ?
பஞ்சாயத்து யூனியன்களுக்குச் சேரவேண்டிய முன்னர் கூறிய வரி வகைகளைத் தவிர, பஞ்சாயத்துகளுக்குச் சேர வேண்டியவைகளான வரி இனங்களை வசூலித்துக் கொடுத்தல்.
கிராம, நகரப் பஞ்சாயத்துகளுக்கு மாறுதல் செய்யக் கூடியதான விகிதசாரமான பிரதேச வரி
ஒதுக்கப்பட்டுள்ள கேளிக்கை வரிகளின் வருமானம் |கிராமப் பஞ்சாயத்துகள் மாத்திரம்)
கிராம வீட்டு வரிக்கு இணையான மான்யம் (மாட்சிங் கிராண்ட்) (கிராமப் பஞ்சாயத்துகள்!
ஆபத்தான மற்றும் ஆட்சேபகரமான தொழில்களுக் கான லைசென்ஸுக் கட்டணம் (கிராமப் பஞ்சாயத்துகள்)