உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

i 22 58. சமுகக் கல்வி மான்யம் எவ்வளவு ? சமுதாய அபிவிருத்தியின் தேசீய விஸ்தரிப்புத் திட்டத் தை-சமூகக் கல்வித் திட்டத்தை நிறை வேற்றுவது உள்பட அரசாங்கம் பஞ்சாயத்து யூனியனிடம் ஒப்படைக்க வேண்டி யிருக்கிறது. அவ்வப்பொழுது அரசாங்கம் விதிக்கிற நிபந் தனகளுக்கு உட்பட்டும் பஞ்சாயத்து இனியன் நடந்து கொள்ள வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு நபருக்கும் பத்து காசுகள் விகிதம் மான்யம் ஒன்று (Non matching grant) கொடுக்கப்படும். இந்த மான்யம், சமூகக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகக் கொடுக்கப்படும். சமூகக் கல்வியின் மாதிரித் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னரே வகுத்திருக்கிறது. மாதிரித்திட்ட, நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ள செலவு இனங்களே பஞ்சாயத்து யூனியன் நிர்வாக முறையில் அனுமதி அளிக்கலாம். சமூகக் கல்வித்திட்ட நிகழ்ச்சி நிரலில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்களை விதிக்கும் பொழுது, அரசாங் கம் நபர் ஒன்றுக்கு வருஷத்துக்குப் பத்து காசுகள் விகிதம் அளிக்கிறது என்பதை, அரசாங்க மான்யத்தைக் கணக்கிடுவ தற்காக மாத்திரமே கவனிக்க வேண்டும். இதைவிட அதிக மான தொகையை பஞ்சாயத்து யூனியன் செலவு செய்ய உரிமை உண்டு. அம்மாதிரி செலவு செய்வதற்கு வெளியார் அனுமதி எதுவும் தேவை இல்லை, குறிப்பிட்ட விஷயங்கள் சம்பந்தமாக தாங்கள் ஒதுக்கியிருக்கும் தொகைகளை மாற்ற ஆம் பஞ்சாயத்து யூனியனுக்கு அதிகாரம் உண்டு. ஆளுல், கீழ்க்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும். பஞ்சாயத்து யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜனத் தொகையின் பேரில் நபருக்கு 10 காசுகள் என்னும் விகிதத் திற்கு மேல் அரசாங்க மான்யத்தின் மொத்தத் தொகை இருக்கக்கூடாது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் திட்டம் வகுத்துள்ளபடி, ரேடியோ செட்டுகள் அமைப்பதற்க்ாக ரூ. 250 க்கு மேற் படாத ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். 59. சமூக கல்விக்கான மாதிரித் திட்டம் எது? சமூகக் கல்விக்கான மாதிரித் திட்டத்தில் கீழ்க்காணும் விஷயங்கள் உள்ளன.