உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பிடவும், அறிந்து கொள்ளவும், முடிவு செய்யவும் வேண்டும். லாபம் வரக் கூடிய நிறுவனங்களில் (enterprise) கடன்களுக் காகச் செய்த செலவுகளை, அந்த நிறுவனங்களிலிருந்தே கொடுக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து வாங்கிய கடன்களைத் திருப்பித் தருவதற்கு ஏற்பாடு செய்வதுதான் கவுன்சில் பட்ஜெட்டின் முதலாவது பொறுப்பாகும். அரசாங்கக்கடன்களைத் திருப்பித் தருவதில் குறை (தராமல் இருத்தல்) எதுவும் இருக்கக் கூடாது. 97. நன்கொடைகள் வழங்குவது எப்படி ? ஒரு பஞ்சாயத்து யூனியன் அரசாங்கத்தினிடம் அனு மதி பெற்று, இந்தியாவின் தற்காப்புக்காக உள்ள எந்த ஒரு நிதிக்கும் நன்கொடை வழங்கலாம்; அது துணை அபிவிருத்தி கமிஷனருடைய அனுமதியுடனும் கூட வழங்கலாம். பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் நடைபெறுகிற எந்த ஒரு பொதுக் கண்காட்சிக்கும், நிகழ்ச்சிக்கும் அல்லது விழாக்களுக்கும் நிதி வழங்கலாம். ஏதாவது தர்மநிதிக்கு தன்கொடை வழங்கலாம். ஏழை களுக்கு உதவி செய்தல், வியாதியஸ்தர்களுக்கு சிகிச்சை செய் தல், பலவீனமான காலத்தில் சிகிச்சை செய்தல், நோயாளி களையாவது, பலவீனம் உள்ளவர்களேயாவது ஏற்றுக்கொள்ளு தல் அல்லது நோயின் காரணத்தை ஆராய்தல், ஆகிய வேலை களில் ஈடுபட்டுள்ள எந்த ஸ்தாபனத்தின் நிதிக்கும் நன் கொடை வழங்கலாம். வேறு ஏதாவது விசேஷ செலவுகளுக்கு செலவு செய்ய லாம். அரசாங்கத்தாராவது, பிற ஸ்தல அதிகாரிகளாவது; அனுமதித்தால், சட்டத்தில்ை அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு காரியத்திற்காகவும் பணம் கொடுக்கலாம் என்று சட்டத்தின் 142-வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. வெள்ளம், புயல்கள் குருவளிகளால் ஏற்படும் கஷ்ட நிவாரணம் செய்யும் பொறுப்பை முழுவதும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமானல், ஜில்லாவிற்குள்ளோ அதற்கு வெளியிலோ இருக்கும் எந்தப் பஞ்சாயத்து யூனியனும் பண்ம்