144 ஆர்டர்களை (Pay_orders)_கமிஷனருக்குக் கொடுத்து, பஞ் சாயத்துகளின் இந்த நிதியிலிருந்து தேவைப்படும்போது பணத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வார்கள். 103. பணப் பெட்டிகள் எதற்காக ? வட்டாரத்தில் இருக்கிற ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத் திற்காகவும் ஒவ்வொரு பணப் பெட்டியை பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் வைத்திருக்க வேண்டும், பஞ்சாயத்து யூனியன்களிட்ம் இருக்கிற ரொக்க_இருப்புத் தொகைகளை ரெவின்யூ டிவிஷன்ல் அதிகாரிகள் திடீரென்று பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் களை தணிக்கை செய்யும் பொழுதும் சோதனை செய்ய வேண்டும். 104. மேற்பார்வை செய்வது யார் ? எல்லாப் பஞ்சாயத்துகளினுடையவும் மற்றும் பஞ்சா பத்து யூனியன் கவுன்சில்களினுடையவும் நடவடிக்கைகளைப் பரிசோதிப்பதற்காக அல்லது மேற்பார்வை இடுவதற்காக அதிகாரிகளை அரசாங்கம் நியமனம் செய்யலாம். துணை அபி விருத்தி கமிஷனர், அல்லது கலெக்டர்; அல்லது எந்த ஒர் அதிகாரிக்கும் பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களையும், பஞ்சாயத்து யூனியன்களின் திர்வாகத்தின்கீழ் இருக்கும் ஸ்தாபனங்கள் மற்றும் கட்டடங்களையும் சோதனை செய்யும் அதிகாரங்கள் உண்டு. மற்றும் அவர் எந்த ஒரு ஸ்தாவர சொத்தையாவது, முன்னேறிக் கொண்டிருக்கிற வேலையை யாவது:வேற்பார்வையிடும் அதிகாரங்களைப் பெற்றிருக்கிரு.ர். 105. அதிகாரியின் அதிகாரங்கள் எவை ? அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரங்கள் கீழே கூறப் பட்டுள்ளனவாகும் : (1) 64, 65-வது பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி எந்த ஒரு பொது வேலை, அல்லது வசதி அல்லது சேவையை ஏற் படுத்தும்படி அல்லது செய்யும்படி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு உத்தரவு இடுவது ; (2) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது கமிஷன ரிடம் அல்லது அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த தஸ்தரவேஜி. ரிஜிஸ்தர் அல்லது பத்திரங்களை தம்மிடம் கொண்டு வந்து ஆஜர்படுத்தும்படி உத்தரவு இடுதல் ;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/178
Appearance