so தலைமை அதிகாரியால் நியமிக்கப்படுகின்றவர், முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்களது பெயர்களே சம்பந்தப் பட்ட பஞ்சாயத்துக்கு காரியாலயம் இருந்தால், அதிலோ அல்லது கிராமத்தில் முக்கியமான ஓர் இடத்திலே விளம்பரம் செய்ய வேண்டும். ஒரு அபேட்சகர் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பஞ்சாயத்துக்கான தேர்தல் நடவடிக்கைகள் எல்லாம் முடிந்தபிறகு, ஒரு மணி நேர்த் துக்குள் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரிக்கு தாம் பணியாற்ற விரும்புகிற ஒரு வார்டைக் குறிப்பிட்டு எழுத்து மூலமாக அவர் அறிவிக்க வேண்டும். பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரியானவர், மேற்படி அபேட்சகர் இன்ன வார்டுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிப்பார். இந்த இரண்டு விஷயங்களிலும் சந்தர்ப்பத்திற்கேற்ப, அபேட்சகர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள இதர வார்டுகளின் காலி ஸ்தானத்தை பூர்த்தி செய்வதற்காக தேர்தல் நடவடிக்கைகள் புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டும். 21. தேர்தல் நடவடிக்கைகளே நிறுத்தி விடுதல் எந்த ஒரு வார்டையாவது அல்லது பல வார்டுகளில் நிச்சயிக்கப்பட்ட தேதியன்று, தேர்தல்களேப் பூர்த்தி செய்வது சாத்தியமில்லே என்று அறியப்பட்டால் ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியானவர் மேற்படி வார்டுகள் சம்பந்தமாக வசதியான ஒரு கட்டத்தில் தேர்தல் நடவடிக் கைகளை நிறுத்திவிட்டு, மேற்சொன்ன கட்டத்திலிருந்து அடுத்த நாள் அல்லது பிந்திய நாளன்று தேர்தல் நடவடிக்கை களேத் தொடர்ந்து நடத்துவதை, முன்னர் சொல்லியுள்ள விதிகளில் எதுவும் தடைசெய்வதாகக் கருதக்கூடாது. ஒட்டுச் சாவடி தலைமை அலுவலர், பஞ்சாயத்து அலுவலராக இருந்தால், அங்கே ஒட்டுவது மூலமும் சம்பந்தப்பட்ட வார்டுகள் ஒவ்வொன்றிலும் முக்கியமான மூன்று இடங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம், தேர்தல்கள் நிறுத்தப்பட்டு விட்டதையும் மீண்டும் ஆரம்பமாகும் தேதியையும் நேரத் தையும் அறிவிக்க வேண்டும். ஆல்ை, ஏதாவது ஒரு கலகம், சச்சரவு, வெள்ளம், தீ விபத்து, இயற்கை உற்பாதம் போன்றவற்றின் காரண மாக தேர்தல்கள் நிறுத்தப்பட்டால், அவ்வாறு நடவடிக் கைகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள், அது சம்பந்த II-2
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/213
Appearance