பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 15. போட்டியிடும் அபேட்சகர் மரணம் அடைந்தால் போட்டியிடும் அபேட்சகரானவர் மரணம் அடைந்து அவருடைய மரணம் வாக்கெடுப்பு_ஆரம்பமாவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டால், தேர்தல் அதிகாரி, அபேட்சகருடைய மரணம் பற்றி சந்தேகமின்றி தெரிந்துகொண்ட பிறகு வாக் கெடுப்பை ர்த்து செய்துவிட வேண்டும். அந்த வார்டுக்கு ஒரு அங்கத்தினரைத் தேர்ந்தெடுப்பதை யொட்டி, ஒரு புதிய தேர்தலுக்கான நடவடிக்கைகளைப் போலவே எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனல், மேற்படி வாக்கெடுப்பை ரத்து செய்யும்போது போட்டியிடும் அபேட்சகராயிருந்த நபர் விஷயமாக எந்தப் புதிய நியமனமும் தேவையில்லே. - மேலும் வாக்கெடுப்பு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு 12-வது விதியின் (1) உட்பிரிவின்படி ஒருவர் தான் அபேட்ச கராயிருப்பதனின்று விலகுவதற்கான அறிவிப்பைக் கொடுத் திருந்திால், அவ்வ்ாறு வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்ட பிற்கு, நட்க்கும் தேர்தலில் ஒரு அபேட்சகராக நியமனம் செய்யப்பட அவர் தகுதியற்றவர் ஆகமாட்டார். 18. ஒட்டுச் சாவடி அலுவலர்கள் நியமனம் (1) ஒரு வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமானுல், தேர்தல் அதிகாரி, 5-வது விதியை அனுசரித்து, 4-வது விதியின்படி வகை செய்துள்ள ஒட்டுச் சாவடி ஒவ்வொன் றிற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒட்டுச் சாவுடி அலுவலரையும் தான் அவசியம் எனக் கருதக் கூடியப்டி அவருக்கு உதவிசெய்ய இதர நபர்களேயும் உடனடியாக நியமித்து, அவர்களது வேலைக்காக நியாயமான ஊதியத்தை அவர்களுக்கு வழங்கலாம். (2) ஒட்டுச் சாவடியில் வாக்குகள் மிகவும் ரகசியமான முறையில் பதிவு செய்யப்படுகின்றனவா என்பதை ஒட்டுச் சாவடி அலுவலர் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரு சமயத்தில் அனுமதிக்க வேண்டிய வாக்காளர்களின் ள்.ண்ணிக்கையை ஒழுங்குபடுத்தி கீழ்க் கண்டவர்கள் தவிர, மற்றவர்களே நீக்கிவிட வேண்டும். (அ) போட்டியிடும் அபேட்சகர்கள், ஒரு சமயத்தில் போட்டியிடும் ஒவ்வொரு அபேட்ச்கரின் ஒரு ஏஜண்ட் (இவரை இனி ஒட்டுச் சாவடி ஏஜண்ட் என்று குறிப்பிடு வோம்; இவரை எழுத்துமூலமாக அபேட் சகர் நியமிப்பார்