1 || (27) தனிப்பட்ட ரஸ்தர்? என்பது, பொது ரஸ்தா அல்லாத தெரு, ரஸ்தா; சதுக்கம்; திறந்த வெளி; சந்து; நடைபாதை, குதிரைச் சவாரிப் பாதை; இவ்வளவையும் குறிக்கும். ஆனால், ஒரு பங்களாவின் சொந்தக்காரர் தமது பங்களாவுக்குள் போக வரவோ, சவுகரியமாக உபயோகித் துக்கொள்ளவோ ஒரு ரஸ்தா அமைத்துக் கொண்டால், அது தனிப்பட்ட ரஸ்தா என்ற குறிப்பில் அடங்காது. (28) பொது ரஸ்தா என்பது பொதுமக்கள் உய யோகிக்க உரிமையுள்ள தெரு, ரஸ்தா; சதுக்கம்; திறந்த வெளி; சந்து; பாதை; குதிரைச் சவாரிப் பாதை இவ்வளவை யும் குறிக்கும். (a) பொதுமக்களின் உபயோகத்திற்காக கட்டப்பட் டுள்ள ஒரு பாலம்; பாலத்தின்மீது போகும் வழி; மேடான பாதை; - (b) அதனுடன் சேர்ந்த ஒற்றை அடிப்பாதை: (c) மேற்கண்டவற்றுடன் சாக்கடைக்கால்; இவற். றின் இருமருங்கிலும் உள்ள இடை நிலம், இவ்வளவும் பொது ரஸ்தாவில் அடங்கும். மேலே குறிப்பிடப்பட்ட இடை நில மானது, தனி நபருக்குச் சொந்தமாயினும் சரி; ராஜ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமானுலும் சரி; மத்திய அரசாங்கத் துக்குச் சொந்தமாலுைம் சரி, அது பொது ரஸ்தாவேயாகும். (29) ஒருவர் ஒரு வீட்டில் வசிப்பவராக எப்போது கருதப்படுவார் என்ருல், அவர் அந்த வீட்டின் ஓர் அறையைச் சில் சமயங்களில் தூங்குவதற்கு உபயோகித்தாலும் போதும். அந்த வீட்டுக்கு அவர் அடிக்கடி வராமல் இருக்கலாம். ஆனால், எந்த சமயத்திலும் திரும்பிவரும் எண்ணத்துடன் இருந்தால் போதும். அவர் அந்த வீட்டில் வசிப்பவராகவே கருதப்படுவார். எனவே, அவர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வருவதில்லே என்ற காரணத்தினுல், அவர் அந்த வீட்டில் வசிப்பதில்லை என்று முடிவு செய்துவிடக் கூடாது. அவருக்கு வேறு ஒரு வீடு இருக்கலாம். இருந்தாலும் முன் குறிப்பிட்ட இடத்தை அவர் அடியோடு விட்டுவிடாத வரையில் அந்த வீட்டிலும் அவர் வசிப்பவராகவே கருதப்படுவார். (30) ரெவின்யூ ஜில்லா’ என்பது ரெவின்யூ நிர்வாகத் திற்காக ஒரு ஜில்லா கலெக்டரின் அதிகாரத்துக்கு உட் பட்டிருக்கும் பகுதியைக் குறிக்கும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/302
Appearance