உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#31 ஒரு பஞ்சாயத்து வாக்காளர் ஜாபிதாவில் தமது பெயருடைய ஒவ்வொருவரும் அந்த ஜாபிதா அமுலில் இருக்கும் வரை-அது எப்போதாவது திருத்தி வெளியிடப் பட்டால், அதற்கு உட்பட்டும் இந்தச் சட்டத்தில் கண்ட இதர வடிரத்துகளுக்கு உட்பட்டும் தேர்தலில் ஒட் அளிக்கும் உரிமை பெற்றவர் ஆவார். அந்த ஜாயிதாவில் தம்முடைய பெயர் இல்லாத எவரும் தேர்தலில் ஒட் அளிக்க முடியாது. விளக்கம் : இந்தப் பிரிவிலும் 21-வது பிரிவிலும், சட்ட சபைத் தொகுதி’ என்று குறிப்பிடப்படுவதானது, சென்னை சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்காக சட்டப்படி ஏற்படுத் தப்பட்ட தொகுதி என்றே பொருள்படும். 21. வாக்காளர் ஜாபிதாவைத் திருத்துவதற்கான அதிகாரம் 20-வது பிரிவில் எவ்வாறு இருப்பினும், நிர்ணயிக்கப் பட்ட அதிகாரியானவர், தமக்கு உசிதமாகத் தோன்றும் முறையில், விசாரனே செய்த பிறகு, அரசாங்கத்தின் கட்டளைக் கிணங்க, சட்ட சபை தொகுதியின் வாக்காளர் ஜாபிதாவுக்கு ச ரி யா க இருப்பதற்காக, பஞ்சாயத்து வாக்காளர் ஜாபிதாவைத் திருத்தி வெளியிடலாம். அங்கத்தினர்களின் யோக்கியதாம்சம், யோக்கியதை குறைவு முதலியன 22. அபேட்சகர்களின் யோக்கியதாம்சம் பஞ்சாயத்தின் வாக்காளர் ஜாபிதாவில் பெயர் காணப் பெருத எவரும் அந்தப் பஞ்சாயத்து அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யோக்கியதை உள்ளவர் ஆக மாட்டார். 28. அரசாங்க உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களின் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களின் தகுதி இன்மை (1) கிராம மணியக்காரர் (head lan) கர்ணம், கிராம ஊழியர்கள், சென்னே அரசாங்க உத்தியோகஸ்தர், ஊழியர், மத்திய அரசாங்க உத்தியோகஸ்தர், ஊழியர், மற்றும் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவன்சில். ம்ன்சிசி