173 (2) அபாயத்தை தவிர்ப்பதற்கு உடனடியாக நட வடிக்கை எடுப்பது அவசியமாக இருந்தால், நோட்டீஸ் கொடுக்காமலே, நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் எந்தவித அபாயத்திலிருந்தும் பாதுகாக்க அல்லது தடுப் பதற்காக, தாமாகவே, மரத்தைப் பாதுகாப்புச் செய்யவோ, கிளேகளே நீக்கவோ மரத்தை வெட்டி அப்புறப்படுத்த உத்தர விடலாம். இதற்காகும் செலவு இதன் பின்னர் குறிப்பிடும் முறையில் அந்த மரத்துக்குக் சொந்தக்காரரிடமிருந்து வசூலித்துக் கொள்ளப்படத் தக்கதாகும். 81. கட்டிடங்கள், நிலங்கள் மீது வேலி யிடுதல் செடிகள், மரங்களின் கொம்புகளையும் கிளைகளையும் அகற்றுதல் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியனின் கவுன்சில் வசம் உள்ள சாலைகளின் ஒரத்திலுள்ள வீட்டுச் சொந்தக் காரர் அல்லது வசிப்பவர் கீழ்க்கண்டவற்றைச் செய்ய வேண்டும் என நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் பொது அறிவிப்பு மூலம் கேட்டுக் கொள்ளலாம், (a) கமிஷனர் அல்லது நிர்வாக அதிகாரிக்குத் திருப்தியளிக்கும் வகையில் வேலியிடுவது. (b) சாலையை ஒட்டியுள்ள வேலிச் செடிகளே, சால் உயரத்திலிருந்து கமிஷனர் அல்லது நிர்வாக அதிகாரி குறிப் பிடும் உயரத்துக்கு மேல் போகாமல் ஒழுங்குபடுத்தவும், அல்லது கொம்பு, கிளேகளே வெட்டிவிடுதல். (c) சாலேயின்மீது கவிந்து போக்குவரத்தின் பார் வையை மறைக்கக்கூடியதாக இடைஞ்சல் செய்யும் வேவிச் செடிகள் அல்லது மரங்களே ஒழுங்குபடுத்துவது அல்லது வெட்டிவிடுவது. (d) சுற்றுச் சுவர் (enclosing Wall) அல்லது வேலி, அதன் உயரம் காரணமாகவும் அபாயம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில், போக்கு வரத்தின் பார்வைக்குத் தடையாக இருந்தாலும் அபாயத்திலிருந்து தடுக்க அதன் உயரத்தைக் குறைக்கும்படி செய்தல். 82. பொதுச் சாலைகள் முதலியவற்றில் உண்டாக்கும் இடையூறுகளுக்கு தடை விதித்தல் (1) இந்தச் சட்டத்தின் விதிகளின்படியும் விதிகளின் மூலம் செய்யப்பட்ட லேசென்ஸில் குறிப்பிடும்கட்டுப்பாடுகளின் படியும் அனுமதிக்கப்பட்டாலன்றி எந்த நபரும்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/364
Appearance