பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 டவுன்ஷிப் கமிட்டி, நகரசபைக்கு மேற்கண்ட எந்தச் சட்டங் களில் கீழ் அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் எந்த தொகையும் செலுத்துவதற்கும் உள்ளாக வேண்டாம். (5) இந்தப் பிரிவில் சொல்லியிருப்பது எதுவும், ஸ்தல அதிகார சபையின் (Local authority) பிரதேச எல்லேக்குள் வசித்து வருகிற ஒருவர் இன்ைெரு ஸ்தல அதிகார சபையின் எல்லேக்குள் தமது தொழில், வேலே, வியாபாரம் உத்தியோகம் செய்தாலும் ஸ்தல அதிகார சபைகள் எவையேனும் விதித்து வாங்கும் அதிக வரித் தொகைக்குமேல், தொழில் வரி செலுத்துவதற்கு அ வ ைர உட்படுத்தாது. அம்மாதிரி விஷயத்தில்,சம்பந்தப்பட்ட ஸ்தல் அதிகார சபைகளிடையே மேற்படி வரியை அரசாங்கம், தகுதி எனக் கருதுகிறபடி பங்கிட வேண்டும். அரசாங்கத்தின் முடிவே இறுதியானது. (6) கம்பெனி, சங்கம் அல்லது கூட்டு ஹிந்துக் குடும்பத் தாரிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொழில் வரியை அக் கம்பெனி அல்லது குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த எந்த நபரிடமிருந்தும் வாங்கலாம். ஆல்ை, சம்பந்தப்பட்ட ஸ்தல அதிகார சபைகளில் ஒன்று கண்டோன் மெண்டு சபையாகவோ அல்லது பெரிய துறைமுக அதிகார சபையாகவோ இருந்தால் அரசாங் கத்தின் முடிவு மத்திய அரசாங்கத்தின் சம்மதத்துக்கு 2.டL டடதிTகுமி. (7) (a) ஒரு கம்பெனி அல்லது நபர் ஒரு பிரதேசத்தில் வியாபாரம் செய்வதற்கு தமது பிரதிநிதியாக ஊழியர்அல்லது ஏஜண்டாக ஒருவரை நியமித்து இருந்தால்,அந்தக் கம்பெனி அல்லது நபர் மேற்கண்ட பிரதேசத்தில் வியாபாரம் நடத்து வதாக கருதப்படுவார். அந்தக் கம்பெனி அல்லது நபரின் தொழில் சம்பந்தமாக தொழில் வரி விதிக்கப்படுவதற்கு உட்படுவார். அந்தப் பிரதிநிதிக்கு, கம்பெனி சார்பில் ஒப்பந்தம் செய்ய அதிகாரமிருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, அவர் அந்த வியாபாரம் சம்பந்தமாக தொழில் வ செலுத்துவதற்கு உட்படுவார். - (b) ஒரு கம்பெனி அல்லது நபர், வேருெரு கம்பெனி அல்லது நபரின் ஏஜண்டாக இருந்தால், முந்திய கம்பெனி. யாவது நபராவது பிரதான கம்பெனியின் அல்லது நபரின் வருமானத்தைப்போல அதே வருமானத்தின் பேரில் தனியே தொழில் வரிக்கு உள்ளாக மாட்டார்.