210 (20) இந்தச் சட்டத்தின்கீழ், கிராம பஞ்சாயத்தும், பட்டணப் பஞ்சாயத்தும் அதன் சார்பில் விதித்து வசூல் செய்யப்படும் அபராதங்களும் தண்டத் தொகைகளும். (21) மேல்ே சொன்னவை தவிர, பஞ்சாயத்துக்கு கிடைக்கும் வருமானம் யாவும்; மற்றும், பஞ்சாயத்து நிதியி லிருந்து நிர்வகிக்கப்படும் அல்லது பண உதவி செய்யப்படும் அல்லது பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்தாபனங்கள் சேவைகள் காரணமாக அல்லது அவற்றிற்கு கொடுக்கப் படும் உதவி மூலம் கிடைக்கும் தொகை களும். (22) பஞ்சாயத்து பெற்றுக் கொள்ளும் எல்லா தொகை களும். - செலவு 188. பெற்றுக்கொண்டுள்ள பணங்களை உபயோகிப்பதும் நிதிகளிலிருந்து செலவு செய்வதும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், கிராமப் பஞ்சாயத்து அல்லது பட்டணப் பஞ்சாயத்து பெற்றுக் கொண்ட சகல தொகைகளேயும் இந்தச் சட்டத்தின் பிரிவுகளேயும், இதர சட்டங்களேயும் அனுசரித்து, உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். - நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு இணங்க, இச் சட்டத் தின்கீழ் விதிக்கப்படும் ஒரு வரியிலிருந்து கிடைக்கும் வருமானம், குறிப்பிட்ட ஒரு பொது அபிவிருத்தி காரியத் துக்கு ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும், பஞ்சாயத்துக்கும் அதிகாரம் உண்டு. அப்போது அத்தகைய வரி அல்லது உபரி வரியிலிருந்து கிடைக்கும் வரவுக்கும் செலவுக்கும் தனியே கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். 189, பஞ்சாயத்து நிதியிலிருந்தும், பஞ்சாயத்து யூனியன் நிதியிலிருந்தும் செலவு செய்தல் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது கிராமப் பஞ்சாயத்து அல்லது நகரப் பஞ்சாயத்து நிதிகள் என்ன காரியங்களுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்பதில், இந்தச் சட்டத்தின்படியோ, இதன் விதிகளின்படியேர் அல்லது வேறு எந்தச் சட்டங்கள், விதிகளின்படியோ
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/401
Appearance