220 (3) பின்னர் தாசில்தார், அந்த நோட்டிஸையும், விளக்கம். ஏதேனும் இருந்தால் அதையும் தலைவர் அல்லது துணைத் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரே ர்னேயையும் ஆலோசிப்பதற்காக பஞ்சாயத்து காரியா லயத்தில் தாம் தீர்மானிக்கும் நேரத்தில் கூட்டம் ஒன்று கூட்ட வேண்டும். (4) சம்பந்தப்பட்ட தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் பஞ்சாயத்தின் எல்லா அங்கத்தினர்களுக்கும் கூட்டம் பற்றிய நோட்டீஸ் நகலே குறைந்த பட்சம் ஒரு வார காலத்துக்கு முன்பாக, தாசில்தாரால் அனுப்பிவைக்கப்பட வேண்டும். (5) இப்பிரிவின்படி கூட்டப்படும் கூட்டத்துக்கு தாசில் தார் தலைமை வகிக்க வேண்டும். அவரைத் தவிர வேறு யர்ரும் தலைமை வகிக்கக்கூடாது. கூட்டத்துக்காக குறிக் கப்பட்ட நேரத்துக்கு மேல் அரை மணிக்குள் தாசில்தார் வந்து சேரவில்லையென்ருல், உட்பிரிவு (6)ன்படி தாசில் தார் நிர்ணயித்து அங்கத்தினர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய ஒரு நேரத்துக்கு கூட்டம் தள்ளிப்போடப்படும். (6) தாசில்தார் கூட்டத்துக்குத் தலைமை வகிக்க முடியாத நிலேயிலிருந்தால், அதற்கான காரணங்களே எழுத்து மூலம் தெரிவித்து, தாம் குறிப்பிடும் இன்னுெரு நேரத்துக்கு கூட்டத்தை ஒத்திப்போடலாம். ஆனால், உட் பிரிவு (3)ன்படி, கூட்டத்துக்காக தீர்மானித்த தேதியி லிருந்து முப்பது நாட்களுக்குமேல் போகக் கூடாது. ஒத்திப் போட்ட நாள் குறித்து, அங்கத்தினர்களுக்கு ஏழு தினங் களுக்குக் குறையாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும். (7) உட்பிரிவுகள் (5), (6)ல் ஏற்பாடு செய்திருக்கிற படிக்கன்றி, மற்றப்படி நோட்டிஸையும், அதற்கு விளக்கம் வந்திருந்தால் அதையும், தலைவர் அல்லது துணைத் தலே வரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற பிரே ரஆணயையும் பரிசீலிக்க, கூட்டப்பட்டிருக்கும் கூட்டம், வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஒத்தி வைக்கப்படக் கூடாது. (8) இப்பிரிவின்படி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தொடங்கியதும் தாசில்தார், இன்ஸ்பெக்டருடைய நோட்டீ சையும், தலைவர் அல்லது துணைத் தலைவரிடமிருந்து விளக்கம் வந்திருந்தால் அதையும் பஞ்சாயத்துக்குப் படித்துக் காட்ட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/411
Appearance