221 (9) இந்தப் பிரிவின்கீழ், கூட்டத்தில் எவ்வித விவாதமும் செய்யக்கூடாது. (10) தாசில்தார் அந்த நோட்டீஸ் அல்லது விளக்கத் தின் தராதரம் குறித்துப் பேசக்கூடாது. அந்தக் கூட்டத்தில் ஒட் அளிக்கவும் அவருக்கு உரிமை கிடையாது. (11) இன்ஸ்பெக்டரின் பிரேரணையை ஏற்றுக்கொண்டு அல்லது நிராகரித்து பஞ்சாயத்து செய்யும் தீர்மானம், நடவடிக்கை குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் நகல், கூட்டம் முடிந்ததும் "தாசில்தாரால் இன்ஸ் பெக்டருக்கு அனுப்பப்பட வேண்டும். (12) மேற்படி பிரேரணையைப் பஞ்சாயத்து ஏற்றுக் கொண்டால், இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பின் மூலம், தலேவர் அல்லது துணேத் தலேவரை பதவியிலிருந்து விலக்கி விட வேண்டும். (13) உட்பிரிவு (12)ன்படி அறிவிப்பு செய்து விலக்கப் பட்ட நபர், பஞ்சாயத்தின் அடுத்த தேர்தல் தேதி அல்லது அறிவிப்பு செய்த தேதியிலிருந்து ஒரு வருஷ காலம்-இந்த இரண்டில் எது முந்தியதாக இருக்கிறதோ அந்தக் காலம் வரை, தலைவர் அல்லது துனேத் தலைவராகத் தேர்ந்தெடுப் பதற்கு அல்லது வேறு பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் ஆவாா. 151. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவர் அல்லது துணைத் தலைவரை நீக்குதல் (1) ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணேத் தலைவர் தமது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் அல்லது வேண்டுமென்றே உத்தரவுகளே நிறைவேற்ற மறுக்கிருர் அல்லது தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிருர் என்று அரசாங்கம் கருதினுல், அவருடைய நடத்தைக்கு குறிப்பிட்ட தேதிக்குமுன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். (2) குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்படி விளக்கம் கிடைத்து, அது அரசாங்கத்துக்குத் திருப்தியளிக்கும் வகையில் இருந்தால், நோட்டீஸ் சம்பந்தமாக மேற் கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் விளக்கம் எதுவும்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/412
Appearance