பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 169. பிராது தொடர அனுமதி (1) பஞ்சாயத்து தலைவர், நிர்வாக அதிகாரி, பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸில் சேர்மன், வைஸ் சேர்மன், கமிஷனர் அல்லது அங்கத்தினர் தமது உத்தியோக சம்பந்த மாக கடமையைச் செய்யும்போது அல்லது செய்ய உத்தேசிக் கும்போது, அவர் ஏதாவது குற்றம் புரிந்துவிட்டதாகக் கருதப் பட்டால், அரசாங்கத்தின் முன்அனுமதி இல்லாமல் எந்த நீதி மன்றமும் அவர்மீது விசாரணை நடத்தக்கூடாது. (2) உட்பிரிவு (1)ன்படி அரசாங்கம் அனுமதி கொடுக் கும்போது, மேற்படி வழக்கு முடிகிறவரை சம்பந்தப்பட்ட தலேவர், நிர்வாக அதிகாரி, சேர்மன், வைஸ் சேர்மன் அல்லது கமிஷனர் தமது கடமைகளேச் செய்து வரக்கூடாது என்று உத்தரவிடலாம். 170. பஞ்சாயத்து முதலியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமுன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட ஒரு செய்கை காரண மாகவாவது, அல்லது நிறைவேற்றுகையில் அதன்கீழ் செய்யப்பட்ட ஏதாவது விதி, துணைவிதி, ஒழுங்குமுறை அல்லது உத்தரவை நிறைவேற்றுவதில், அஜாக்கிரதை யாக நடந்து கொண்டதாகவோ அல்லது தவறு செய்த தாகச் சொல்லப்படுவது சம்பந்தமாகவோ ஒரு பஞ்சாயத்து அல்லது அதன் தலைவர், அல்லது நிர்வாக அதிகாரி அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது அதன் சேர்மன் அல்லது கமிஷனர் அல்லது அங்கத்தினர், உத்தி யோகஸ்தர் அல்லது ஊழியர் அல்லது மேற்கண்டவர்களின் கட்டளேப்படி செயல்படுகிற யாராவது ஒரு நபர் மீது, 171-வது பிரிவுக்கு உட்பட்டு, எந்த வழக்கையும் அல்லது இதர சட்ட நடவடிக்கையையும் தொடரக்கூடாது; மேற்படி நடவடிக்கையின் காரணம், பரிகாரத்தின் தன்மை, நஷ்ட ஈட்டுத் தொகை, உத்தேசிக்கப்பட்ட வாதியின் பெயர், அவரது இருப்பிடம். இவற்றை தெரிவித்து, எழுத்துமூலமான நோட்டீஸ் ஒன்றை பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் காரியாலயத்தில் கொடுத்ததிலிருந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரையில், வழக்கு அல்லது சட்டநடவடிக்கை எதுவும் தொடர்க்கூடாது; தவிர, மேலே