241 உத்தேசித்திருந்தால், அவருக்கும் அந்த நோட்டிஸ்ை சேர்ப்பிக்க வேண்டும். அல்லது அவருடைய குடியிருப்பு இடத்தில் அதைக் கொடுக்கச் செய்ய வேண்டும். (2) அத்தகைய ஒவ்வொரு நடவடிக்கையும் அது ஒரு ஸ்தாவர சொத்தை திரும்ப அடைவதற்காகவோ அல்லது அதற்குள்ள பாத்தியதையை நிர்ணயித்துக் கொள்ளவாவது எடுத்துக் கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலொழிய, மற்றபடி வழக்கு மூலம் உண்டான தேதிக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குஉள்ளாகிலும் தீங்கு அல்லதுசேதம் தொடர்ந்து நேரிட்டுக் கொண்டே இருக்கும் விஷயத்தில், அப்படி நேரிட்டுக் கொண்டே இருக்கும் போதாகிலும், அல்லது அது நின்று போன ஆறு மாதத்துக்குள்ளாகிலும் தொடங்க வேண்டும். (3) உட்பிரிவு (1)ன்படி நோட்டீஸ் கொடுக்கப்படுகிற பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது நபர், நடவடிக்கை தொடங்கு முன்பே வாதியிடம் ஏதாவது தொகை கொடுக்கமுன்வந்தால், வழக்கில் அவ்வாறு கொடுக்க முன்வந்த தொகைக்குமேல் வாதி அவரிடம் பெற்றுக் கொள்ளாவிட்டால், அந்தத்தொகை கொடுக்க முன் வந்த பிறகு, அவர் ஏதேனும் செலவுகள் செய்திருந்தால் அவற்றை வசூலிக்கக் கூடாது; தவிர, பிரதிவாதி அவ்வாறு தொகை கொடுக்க முன் வந்ததற்குப் பிறகு ஏற்பட்ட எல்லாச் செலவுகளேயும் வாதி அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். - - 171. நல்ல எண்ணத்தோடு செயலாற்றுகின்ற சேர்மன், தலைவர், அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மன், கமிஷனர், பஞ்சாயத்து தஃலவர், நிர்வாக அதிகாரி, ஒரு அங்கத் தினர், அதிகாரி, அல்லது ஊழியர், அல்லது பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கட்டளேயின்படி செயல்புரியும் ஒருவர், இந்தச் சட்டத்தின்கீழ் செய்த அல்லது செய்திருப்பதாக கருதப்படுகிற செய்கை பற்றி அல்லது இந்தச் சட்டத்தை அல்லது அதன்கீழ் உள்ள விதி, ஒழுங்கு முறை அல்லது உத்தரவை நிறைவேற்றுவதில் அசட்டை யாக இருந்தது அல்லது அதை நிறைவேற்றுவதில் தவறுதல் ஏற்பட்டதானது நல்ல எண்ணத்தில் செய்யப்பட்டிருந்தால், மேற்கண்டவர்கள்மீது எந்த வழக்கும் அல்லது சட்ட நடவடிக் கையும் எடுக்கக் கூடாது; ஆனால், அத்தகைய நடவடிக்கை H–16
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/432
Appearance