பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தோன்றில்ை, அவ்வப்போது நிர்ணயித்த தேதியைத் தள்ளிப் போட இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் உண்டு. (8) உட்பிரிவு (2) ன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக ஏற்பட்ட காலி ஸ்தானத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட அங்கத்தினர்களுடைய பதவிக் காலம் இன்ஸ் பெக்டர் நிர்ணயிக்கும் வருஷம் தேதியுடன் முடிவடையும். 187.A. புதிய பஞ்சாயத்து யூனியன்கள் விஷயத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் (1) இந்தச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருந்த போதிலும், இந்தச் சட்டத்தின்கீழ் அல்லது 1964-ம் வருஷத்திய சென்னே பஞ்சாயத்துகள் (பலவகை ஏற்பாடு க்ளும் திருத்தங்களும் சட்டத்தின்படி, ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்காக பஞ்சாயத்து யூனியன் அமைக் கப்பட்டபோது 44-வது பிரிவைச் சேர்ந்த (1)-வது உட் பிரிவுப்படி, அரசாங்கம் ஒரு அபிவிருத்தி அதிகாரியை நியமிக்கலாம். அந்த அதிகாரிக்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் சேர்மனுகவோ அல்லது கமிஷனராகவோ இருந்து கடமைகளே நிறைவேற்றவும், அதிகாரங்களேச் செலுத்தவும், செயல்படவும் அதிகாரம் உண்டு. (2) இந்தப் பிரத்யேக அதிகாரியானவர், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்கள் பதவியேற்கும் வரை யிலோ அல்லது சேர்மன் பதவியேற்கும் வரையிலோ அல்லது கமிஷனர் நியமனம் ஆகும் வரையிலோ மேற்குறிப்பிட்ட அதிகாரங்களேச் செலுத்தலாம். - (3) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கூடியவிரைவில், சேர்மனே தேர்ந்தெடுப்பதற்காக, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் கூட்டம் ஒன்று பிரத்யேக அதிகாரி நிச்சயிக்கும் தேதியிலும் நேரத்திலும் நடைபெற வேண்டும். ஒருவேளை அந்தக் கூட்டத்தில் சேர்மன் தேர்ந்தெடுக் கப்படாவிட்டால், பிரத்யேக அதிகாரி நிர்ணயிக்கும் தேதியிலும் நேரத்திலும் மறுபடியும், தேர்ந்தெடுப்பதற்காக கூட வேண்டும். (4) அவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட ஏதாவது ஒரு பஞ்சாயத்து யூனியனிலோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ