உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 2. கூட்டுக் கமிட்டி, ரெகுலேஷன்களால் அமைக்கப்பட வேண்டும். அவற்றைச் சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபனம் ஒவ்வொன்றும் ஒப்புக்கொண்டாலொழிய, 5-வது -ேவது விதிகளில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நீங்கலாகவன்றி மற்றபடி செல்லுபடி ஆகாது. 3. மேற்படி நடை முறைகளில் அடியிற் கண்டவை நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் (அ) கூட்டுக் கமிட்டியின் மொத்த அங்கத்தினர்க ளுடைய எண்ணிக்கை; (ஆ) சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர் களாய் இருக்க வேண்டியவர்களுடைய எண்ணிக்கையும், வெளியார்களாக இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையும்; (இ) கூட்டுக் கமிட்டியின் அங்கத்தினர்களாக யார் யார் இருக்க வேண்டும் என்பது; அவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அல்லது நியமிக்கப்பட வேண்டும் என்பது; . (ஈ) கூட்டிக் கமிட்டியின் தலைவர் யார் என்பது அல்லது அவர் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லது நியமிக்கப்பட வேண்டும் என்பது; (உ) அங்கத்தினர், தலைவர் ஆகியவர்களின் பதவிக் காலம்; (ஊ) சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபனங்களில் ஒன்று அல்லது பல, செலுத்தத்தக்க அதிகாரங்களில் கூட்டுக் கமிட்டி செலுத்தத்தக்க அதிகாரங்கள்; (எ) கூட்டுக் கமிட்டியின் நடைமுறை. 4. 2-வது, 3-வது விதிகளின்கீழ் செய்யப்பட்ட நடை முறைகளே மாற்றலாம், அல்லது ரத்து செய்யலாம். ஆனால், அவ்வாறு மாற்றுவதற்கு, அல்லது ரத்து செய்வதற்கு சம்பந் தப்பட்ட ஸ்தல ஸ்தாபனங்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். 5. இன்ஸ்பெக்டர் 52-வது பிரிவு (1)-வது உட்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்துக்கொண்டால், 2-வது, 3-வது விதிகளில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எல்லாவுற்றின்