பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சம்பந்தமாகவும், அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றின் சம்பந்தமாக தாம் அவசியமென், அல்லது விரும்பத்தக்க தெனக் கருதுகிற கட்டளேகளைப் பிறப்பிக்கலாம். 6. ஸ்தல ஸ்தாபனங்களிடையே மேற்கூறிய விதிகளில் எதன் கீழேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதை இன்ஸ்பெக்டர் தீர்ப்புக்கு அனுப்பிவைக்க வேண்டும்; அவரது தீர்ப்பு முடிவானதாகும். 7. 52-வது பிரிவின் (1) உட்பிரிவின்கீழ், அல்லது மேற்கூறிய விதிகள் ஏதாவது ஒன்றின்கீழ் இன்ஸ்பெக்டருக் குள்ள அதிகாரங்கள், சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபனங் களில் ஒன்று, கன்டோன்மெண்ட் அதிகார சபையாக அல்லது பெரிய துறைமுகம் ஒன்றின் துறைமுக சபையாக இருந்தால், ராஜ்ய அரசாங்கத்தின் மூலம் பெற வேண்டிய மத்திய அரசாங்கத்தினர் சம்மதத்துடன் மட்டுமே செலுத்தப் படத்தக்கவையாகும். 19. கூட்டங்களில் தீர்மானம் கொண்டுவருதல் [L. f. 178. (2) VI] விதிகள் 1. தீர்மானம், ஒன்றைக் கொண்டுவர விரும்புகிற அங்கத்தினர் ஒருவர், தமது உத்தேசத்தைத் தலைவருக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும். அவர் இது குறித்து ப்த்து தினங்களுக்கு முன்னரே அறிவிப்புக் கொடுக்க வ்ேண்டும்; அவர் கொண்டுவர விரும்புகிற தீர்மானத்தின் பிரதி ஒன்று அந்த அறிவிப்பில் கண்டிருக்க வேண்டும்; ஆனல், பத்து நாட்களுக்குக் குறைந்த தீர்மானம் ஒன்றை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்குத் தலைவர் அனுமதி அளிக்கலாம். 2. அடியிற்கண்ட நிபந்தனைகளே அனுசரிக்காத தீர்மா னம் எதுவும் அனுமதிக்கப்படலாகாது; அவையாவன: o (а) அந்தத் தீர்மானம் தெளிவாகவும், திட்டமாகவும் இருக்க வேண்டும். அது குறிப்பான பிரச்னை ஒன்றை விழுப்புவதாகவும் இருக்க வேண்டும்.