பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 (b) விவாதங்களோ, அனுமானங்களோ, கிண்டலான வார்த்தைகளோ, இழிவான அறிக்கைகளோ அதில் இருக்கக் கூடாது. எவரையும், அவருடைய அரசாங்க அல்லது பொதுப் பதவி முறையில் அல்லாமல், மற்றபடி அவருடைய சொந்த நடத்தையையோ, குணத்தையோ அதில் குறிப் பிடக்கூடாது. 8. ஒரு தீர்மானம், அனுமதிக்கப்படத்தக்கதா என்ப தைத் தலைவர் தீர்மானிப்பார். பஞ்சாயத்துச் சட்டத்தை, அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் பிரிவுகள்ே மீறுகிறதென அவர் கருதினால், மேற்படி தீர்மானத்தை நிரா கரிக்கலாம்; தலைவரின் தீர்ப்பு முடிவானதாகும்; ஆல்ை, ஒரு தீர்மானம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்குச் சம்பந்தப்படாத விஷயமாக இருக்கிறதென தலைவர் கருதி ல்ை, அவர் அந்தத் தீர்மானத்தைக் கலெக்டருக்கு அனுப்பி, அதை அனுமதிக்கலாமா என்பது குறித்து கலெக்டருடைய உத்தரவைப் பெற வேண்டும். - - 4. தலேவர் அனுமதித்துள்ள தீர்மானம், கூட்டத்திற் கான அறிவிப்பில் கண்ட நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட் டிருக்க வேண்டும். 5. (1) நிகழ்ச்சி நிரலில் எந்த அங்கத்தினரின் பேரில் தீர்மானம் இருக்கிறதோ அந்த அங்கத்தினர் அழைக்கப் படுவதன்மேல், (a) அந்த தீர்மானத்தை வாபஸ் பெறலாம்; அவர் அப்படி வாபஸ் பெறுவதால்ை, அதை மட்டுமே கூற வேண்டும்; அல்லது, - (b) தீர்மானத்தைப் பிரேரேபிக்க வேண்டும். (2) தீர்மானத்தைப் பிரேரேபிக்கும்படி அழைக்கும் போது அந்த அங்கத்தினர் வராதிருந்தால், அல்லது அதை வாபஸ் பெற உத்தேசித்தால் அல்லது அந்தத் தீர்மானத் தைப் பிரேரேபிக்க விரும்பாவிட்டால், அல்லது அவர் அங்கத்தினராயிருப்பது அக்கூட்டிம் முடிவடைவதற்குமுன் முடிவடைந்திருந்தால், அக்கூட்டத்திற்கு வந்திருத்திற அங்கத்தினர் எவரேனும் மேற்படி தீர்மானத்தைப் பிரேரே இக்கல்ாம்; எந்த அங்கத்தினரும் அதைப் பிரேரேபிக்கா விட்டால், அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டிருப்பதாகக் கருதப்படும்.