உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 3. 3} கடைசியாக, மூல தீர்மானத்தை ஒட்டுக்கு விட வேண்டும். ஆல்ை, மூல தீர்மானத்தையும் திருத்தங்களேயும் தலைவர், தாம் தகுதியெனக் கருதுகிற எந்த முறையில் வேண்டு மாலுைம் ஒட்டுக்கு விடலாம். 11. பல அம்சங்கள் அடங்கிய ஏதாவது ஒரு தீர்மானம் விவாதிக்கப்பட்ட பிறகு, தலேவர் தகுதியெனக் கருதில்ை, அவர் அந்தத் தீர்மானத்தைப் பல அம்சங்களாகக் கூறி விட்டு, ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியே ஒட்டுக்கு விடலாம். விளக்கம்:- இவ்விதிகளில் தலைவர் என்பதில், பஞ்சா யத்துச் சட்டத்தின் 34-வது பிரிவைச் சேர்ந்த, (1), (2) அல்லது (3) உட்பிரிவுகளின் கீழும், 33-வது பிரிவின் கீழும் தற்காலிகமாக தலேவர் பதவியின் பொறுப்பு வகிக்கும் நபர் என்பதும் அடங்கும். 20. அங்கத்தினர்கள், தலைவரை கேள்வி கேட்பது எப்படி? [Li.e. 178. (2) VII விதிகள் 1. பஞ்சாயத்துக் கூட்டம் ஒன்றில், பஞ்சாயத்து நிர் வாகத்திற்குச் சம்பந்தப்படாத எந்த விஷயம் குறித்தும் கேள்வி எதுவும் கேட்கப்படவும் கூடாது, பதிலளிக்கவும் கூடாது. தகவல் அடிப்படையில் அமைந்திராத எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது. பதிலும் தகவல் அடிப் படையிலேயே அமைந்திருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனேகளுக்கும், கீழ்க்கண்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள நிபந்தனேகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு பஞ்சா யத்து அங்கத்தினர் ஒருவர் எந்தக் கேள்வியை வேண்டு மானுலும் கேட்கலாம். 2. கேள்வி ஒன்று கேட்க விரும்புகிற பஞ்சாயத்து அங்கத்தினர் ஒருவர், தமது உத்தேதத்தைத் தலைவருக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும். அவர் இது குறித்து பத்து தினங்களுக்கு முன்னரே அறிவிப்புக் கொடுக்க வேண்டும். அவர் கேட்க விரும்புகிற கேள்வியின் பிரதி ஒன்று அந்த அறிவிப்பில் கண்டிருக்க வேண்டும்.