33 5. தலைவர் அனுமதித்த கேள்விகள், அந்த தினத்துக்கு உரிய நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். கேள்வி கேட்ட அங்கத்தினர் அதை முன்னரே வாபஸ் வாங்கியிருந் தாலொழிய, நிகழ்ச்சி நிர்லில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தலைவர் பதில் அளிக்க வேண்டும்; நிகழ்ச்சி நிரலில் இருக்கும் வரிசைப்படியே கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்; அந்தக் கூட்டத்தில் வேறு அலுவல் கள் தொடங்குவதற்குமுன் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்; ஆனால், நிகழ்ச்சி நிரலிலுள்ள ஒரு கேள்வி வாபஸ் பெறப்பட்டிருந்தபோதிலும், கேள்விக்குப் பதில் அளிப்பது பொது நலனுக்கு உகந்தது. என தலைவர் கருதினுல், அவர் அவ்வாறே பதில் அளிக்கலாம். - 6. ஏற்கெனவே பதில் அளிக்கப்பட்டுள்ள கேள்வி விஷயமாய் மேற்கொண்டும் தகவல் அறிவதற்காக, அங்கத் தினர் துணைக் கேள்வி கேட்கலாம். ஆல்ை, துணைக் கேள்வி, கேள்வி விஷயம் குறித்த விதி களே மீறுகிறது என தலைவர் கருதினுல், அவர் அதை நிரா கரிக்கலாம். மேலும், துனேக் கேள்வி ஒன்றிற்கு முன் அறிவிப்பின்றி பதில் அளிக்க மறுக்கலாம்; அப்படி மறுத்தால், பஞ்சாயத் தின் அடுத்த கூட்டத்தில் புதிய கேள்வியாகத்தான் அதைக் கேட்க வேண்டும். 7. இந்த விதிகளின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி விஷ யமாய், அல்லது அந்தக் கேள்விக்கு அளித்த பதில் விஷய மாய் விவாதம் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. - 8. கேட்ட கேள்வியும், கொடுத்த பதிலும் பஞ்சாயத்து நடவடிக்கைகளில் பதியப்பட வேண்டும். 9. இந்த விதிகளில் தலைவர் என்பதில், பஞ்சாயத்துச் சட்டத்தின் 34-வது பிரிவைச் சேர்ந்த (1), (2) (3) உட் பிரிவுகளின் கீழும், 85-வது பிரிவின் கீழும், தற்காலிகமாக தலைவர் பதவியின் பொறுப்பு வகிக்கும் நபர் என்பதும் அடங்கும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/520
Appearance