35 தீர்மானத்தின் மூலம், 3-வது விதியின்கீழ் அமைக்கப்பட்ட ஏதாவது ஒரு கமிட்டியிலும் அங்கத்தினராக சிலரை நியமிக் கலாம். அவர்கள், அந்தக் கமிட்டியில் பணியாற்ற விசேஷ தகுதிகளேயோ, சிறப்பான விருப்பத்தையோ உடையவர் களாக இருக்கிருர்களென பஞ்சாயத்து கருதுபவர்களா யிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நபர்களின் எண் ணிக்கை, கமிட்டி அங்கத்தினர்களின் மொத்த எண்ணிக் கையில் மூன்றில் ஒரு பங்கிற்குமேல் இருக்கக்கூடாது, (ii) பஞ்சாயத்து அங்கத்தினர்களின் கடமைகள், அதிகாரங்கள், பொறுப்புகள், தகுதியின்மைகள், செயலின் மைகள் ஆகியவைபற்றி பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவுகள், அந்தக் கமிட்டியில் பஞ்சாயத்து அங்கத்தினர்கள் நீங்கலாக, இதர அங்கத்தினர்களுக்கும் பயன்படும். 5. இந்த விதிகளின்கீழ் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிட்டியிலும் தலைவர், தமது பதவியின் காரணமாக கமிட்டி யின் தலைவராகவும் அங்கத்தினராகவும் இருப்பார். 22. நடவடிக்கைக் குறிப்புகள் அல்லது பதிவேடுகளின் நகல்களை வழங்குதல் [L. G. 178. (2) XXVII] விதிகள் 1. ஒரு பஞ்சாயத்தின் நடவடிக்கைக் குறிப்பு அல்லது பதிவேடுகளின் நகல்களே, அல்லது அவற்றிலிருந்து எடுத்து எழுதப்பட்ட பகுதிக்ளே ஒரு நபர் பெற விரும்பினால், அவர் நிர்வாக அதிகாரிக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். அவரது முழுப் பெயர், முகவரி, நடவடிக்கைக் குறிப்புகள் அல்லது பதிவேடுகள் பற்றி கூடியவரை சரியான விவரம், இவற்றை அந்த விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட வேண்டும். நடைமுறை காலண்டர் ஆண்டுக்கு. முந்திய ஆண்டுக்கு அந்த நடவடிக்கை குறிப்புகள் அல்லது பதிவேடுகள் சம்பந்தப்பட்டவையாயிருந்தால் கீழே குறிப்பிட் டுள்ள விகிதப்படி தேடு கூலியை, மேற்படி விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டவுடன் பஞ்சாயத்தில் செலுத்த வேண்டும். (1) (a) ஒரே ஒரு துஸ்தாவேஜ அல்லது பதிவுக்காக குறிப்பிட் ஆண்டின் பதிவேடுகளைத் தேடுவதற்கு-ஐம்பது காசுகள்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/522
Appearance