உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் மந்திரி அல்லது அரசாங்க காரியத்ரிசியைப் பேட்டி காண்க் கூட்ாது. (4) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர், ஒரு நியமனத்திற்காகவோ அல்லது உத்தியோக உயர்விற் காகவோ அனுப்பும் ஒவ்வொரு விண்ணப்பமும் தகுந்த அதிகாரிகள் மூலம் அனுப்பப்பட வேண்டும். : :- “:৫৫ 20. அலுவலர்களையும் ஊழியர்களையும் கெளரவிப்பதற்காக நடக்கும் பொது விழாக்கள் (1) பஞ்சாயத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் ஏதேனும் ஒரு வாழ்த்துரையை அல்லது பிரிவு உபசாரத் தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அவரைக் கெளரவிப் பதற்காக நடந்த ஒரு பொதுக்கூட்டம் அல்லது விழா வுக்குச் செல்லவுங்கூடாது. எனினும், மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் அவருடைய தனிப்பட்ட நண்பர்களால் அல்லது அங்கத்தினராக உள்ள ஒரு சங்கத்தினரால், அவருக்குக் கொடுக்கப்படும் ஒரு வழியனுப்பு விழாவுக்குச் செல்வதில் ஆட்சேபனை எதுவும் இல்லே. ஆல்ை, அழைப் பைப் பெற்றுக்கொள்ளும்போது, மேற்படி அலுவலர் அல்லது ஊழியர், அந்த நிகழ்ச்சி முற்றிலும் தனிப்பட்டது, எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு பொதுக்கூட்டத்தைப் போன்ற தல்ல என்பதைப் பற்றியும், அவருக்கு எந்த விதமான உரை யும் படித்து அளிக்கப்பட மாட்டாது என்பதைப்பற்றியும், நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியிடப் படமாட்டாது என்பதைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். (2) எந்த வகையைச் சேர்ந்த அலுவலர் அல்லது ஊழி யரும் அவரின்கீழ் வேலே செய்யும் அலுவலர்களிடமிருந்து எவ்விதமான உபசாரத்தையும் ஏற்கக்கூடாது. 21. பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியராக் இல்லாத ஒரு நபர், அங்கத்தினராக, நிர்வாகியாக அல்லது ஆதரவாளராக இருக்கும் பஞ்சாயத்து அலுவலர்-ஊழியர் சங்கம், யூனியன் அல்லது சமஷ்டி எதிலும், பஞ்சாயத்தின் எந்த அலுவலரும் அல்லது ஊழியரும் அங்கத்தினராக இருக்கக்கூடாது.