62 (i) கடைநிலை ஊழியம்’, உயர்நிலை ஊழியம்’ என்பவை, இந்த விதிகளின் 1-ஆம் இணைப்பின் கடை நில ஊழியம்’, உயர்நிலை ஊழியம்’ என்று முறையே வகைப்படுத்தப்பட்டுள்ள பதவிகளில் செய்யும்பணி என்று பொருள். (ii) சம்பளம்” என்பது, அடிப்படை மாதச் சம்பளம் என்று பொருள்; இதில் சொந்தச் சம்பளமும் அடங்கும்; (iii) ஊழியர்’ என்பது, பஞ்சாயத்தின்கீழ், பதவி வகிக்கும் ஓர் அலுவலர் அல்லது ஊழியர் என்று பொருள். 2. இந்த விதிகளின்கீழ் கிராஜுயிடி, நிரந்தர ஊழியம், தற்காலிக ஊழியம் ஆகியவை குறித்து அனுமதிக்கப்படத் தக்கதாகும். வேலேயிலிருந்து படிகளுடன் லீவு எடுத்துச் செல்லும் கால அளவும் மேற்படி ஊழியத்தில் அடங்கும். கிராஜுயிடி, பூரணமான ஊழிய ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். தகுந்த விஷயங்களில், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மூன்று மாதங்களுக்கு மேற்படாமல், குறையும் கால அளவை மன்னித்து விடலாம். பஞ்சாயத் தும் அவ்வண்ணமே பன்னிரண்டு மாதங்களுக்கு மேற் படாமல் குறையும் கால அளவை மன்னித்து விடலாம். 3. யாரேனும் ஒரு ஊழியர், எந்தக் கால அளவுக்கு எதிர்காலச் சேமிப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்) பெற உரிமையுள்ளவராக இருக்கிருரோ அந்தக் கால அளவுக்கு கிராஜுயிடி எதுவும் அவருக்கு வழங்கப்பட மாட்டாது. 4. பென்ஷன் பெறத்தக்க ஊழியத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு, இந்த விதிகளின்கீழ் கிராஜூயிடி எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. அதாவது ஓய்வு ஊதி யத் திட்டத்தின்கீழ் அவருக்குக் கிடைக்கக்கூடிய கிராஜு யிடியை தவிர, வேறு எதுவும் அவருக்கு வழங்கப்பட மாட்டாது. 5. அடியிற்கண்ட சூழ்நிலைகளில் ஊழியர் ஒருவருக்கு கிராஜூயிடி எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. (a) பஞ்சாயத்து ஊழியத்திலிருந்து அந்த ஊழியர் நீக்கப்பட்டிருப்பது; அல்லது, (b) தவறன. நடத்தைதாரணமாக அல்லது திறமை யின்மை காரண்மாக அவரை வேலேயினின்று நீக்கிவிட்டால்:
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/549
Appearance