பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஊழியர் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப் பட வேண்டும். 9. 2 முதல் 7 வரையிலுள்ள விதிகள், 12-வது விதி ஆகியவற்றின் பிரிவுகளுக்கு உட்பட்டு, எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்பட்டுள்ள, உயர்நிலை ஊழியத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அவர்கள் மேற்குறிப்பிட்ட நிதியில் அனுமதிக்கப்படுவதற்கு முன், ஒவ்வொரு ஆண்டு கால அளவு ஊதியத்திற்காகவும் அரை மாதச் சம்பளம் கிராஜு யிடியாகப் பெறலாம்; மேற்படி கிராஜுயிடி எதிர்காலச் சேமிப்பு நிதியிலிருந்து, அவர்கள் பெறக்கூடிய தொகை களேத் தவிர்த்து கொடுக்கத் தக்கதாகும். ஆனால், அவர் மேற்சொன்ன நிதியில் அனுமதிக்கப்படுவதற்கு முன் அவரது ஊழிய கால அளவு பதினேந்து ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், அவருக்கு அனுமதிக்கப்படும் கிராஜுயிடி ஆறு மாதச் சம்பளத்திற்கு மேற்படக்கூடாது. அவரது ஊழிய கால அளவு பதினேந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற் பட்டால் அவருக்கு அனுமதிக்கப்படக்கூடிய கிராஜுயிடி பதினேந்து மாதச் சம்பளமாகும். இந்த விதியின்கீழ், அனுமதிக்கத்தக்க கிராஜுயிடி, அவர் எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்படுவதற்கு அடுத்து, முன், அவர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் கண்க்கிடப்பட வேண்டும். 10. 2 முதல் 7 வரையிலுள்ள விதிகள், 18-வது விதி ஆகியவற்றின் பிரிவுகளுக்கு உட்பட்டும், அடியிற்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டும், எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்படாத கடைநிலை ஊழியர்களுக்கு அவர்கள் ஊழியத்தின் ஒவ்வொரு ஆண்டுக்காகவும் ஒரு மாதச் சம்பளம் என்ற விகிதத்தில் கிராஜுயிடி வழங்க வேண்டும். (a) முதல் ஐந்தாண்டு ஊழியத்திற்காக கிராஜுயிடி அனுமதிக்கப்படமாட்டாது. (b) கிராஜுயிடி எந்த விஷயத்திலும் 20 மாதச் சம்ப ளத்திற்கு மேற்படக்கூடாது. இந்த விதியின்கீழ் அனுமதிக்கப்படும் கிராஜுயிடியை 7-வது விதியின்கீழ், கிராஜூயிடி வழங்கத்தக்க காலத்தில், ஊழியர் பெறும் சம்பளத்தின் அடிப்படையில் கண்க்கிட் வுேண்டும். ---