பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. ஒருவகை செய்யவோ கூடாது ; அல்லது புதைக்கவும், எரிக்கவும் அல்லது வேறு வகையில் ஒருவகை செய்யவும் காரணமாக இருக்கக்கூடாது ; அல்லது அவற்றை அனுமதிக் கவும் கூடாது. (4) துணை விதி (1)-ன்படி பஞ்சாயத்து பிறப்பித்த எந்த அறிக்கையையும் கலெக்டர் ரத்து செய்யலாம் அல்லது திருத்தலாம். 8. 2(1), 3(1), 5, 6, 7(3) ஆகிய விதிகளின் ஏதாவதொரு பிரிவுக்கு எதிரிடையாக யாராவது செய்தால், அவர் நூறு ரூபாய் வரையில் அபராதம் செலுத்தும் தண்ட ன்ே க்கு உள்ளாவார். . & ஆனால், 5-வது விதியின் பிரிவுகளே மீறியதற்காக, பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரியின் எழுத்து மூலமான அனுமதியில்லாமல் வழக்கு ஏதும் தொடரக்கூடாது. 38. பிராணிகளைக் கொல்வதற்கான இடங்களின் உபயோகம், லைசென்ஸ் su. &. 109. (a) (b) (c)] விதிகள் 1. எந்த நபரும், நிர்வாக அதிகாரியின் எழுத்து மூல மான அனுமதி இல்லாமலோ அனுமதியின்படியோ அல்லா மலும் மற்றப்படியாகிலும் ஏதாவது ஒரு ஆடு, மாடு, குதிரை, செம்மறியாடு, வெள்ளாடு அல்லது பன்றியை, பஞ்சாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுவான ஆடு, மாடு முதலியவற் றைக்கொல்லும் தொட்டியில் அல்லாமல் மற்றபடிகிராமத்தின் அல்லது நகரத்தின் எந்த இடத்திலும் கொல்லவோ, துண்டு போடவோ அல்லது தோல் உரிக்கவோ அல்லது கொல்லப் படுவதற்கோ, துண்டுபோடுவதற்கோ அல்லது தோல் உரிப் பதற்கோ அனுமதிக்கக்கூடாது. ஆல்ை, நிர்வாக அதிகாரி, திருவிழாக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும் அல்லது விசேஷ ஏற்பாடாக வாவது தமக்கு உசிதமாகத் தோன்றுகிற, கிராமம் அல்லது நகரத்திற்குள் உள்ள கோயில்கள் அல்லது அவற்றின் சுற்றுச் சார்புகள் தவிர மற்ற இடங்களில் ஏதாவது ஒரு பிராணியைக் கொல்வதற்கு அனுமதி கொடுக்கலாம், III–7