உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9? 7. அரை ஆண்டின் பகுதியில் சேர்க்கப்பட்ட அல்லது விலக்கப்பட்ட பகுதியில் வரி வஜா (1) ஏதாவது ஒரு பிரதேசம் ஒரு கிராமத்தில் அலலது நகரத்தில் சேர்க்கப்பட்டால், அந்தப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் சொந்தக்காரரும் (a) அவ்வாறு சேர்த்த தேதி, ஓர் அரை வருஷத்தின் கடைசி இரண்டு மாதங்களுக்குள் இருந்தால், அந்த வீ. விஷயமாய் அந்த அரை வருஷத்துக்கு வீட்டு வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லே. (b) அந்தத் தேதி, ஒர் ஆரை வருஷத்தின் முதல் நான்கு மாதங்களுக்குள் இருந்தால், அந்த வீடு விஷயமாய் அந்த அரை ஆண்டுக்குச் செலுத்தத்தக்க வரியில் பாதி வரையில் வஜா செய்யப்படுவதற்கு உரிமையுள்ளவராவார்: அந்தத் தேதிக்கு முன் அந்த அரை ஆண்டில் இருக்கிற நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி அந்த வஜா இருக்க வேண்டும். (2) ஏதாவது ஒரு பிரதேசம் ஒரு கிராமத்திலிருந்து அல்லது நகரத்திலிருந்து விலக்கப்பட்டால், அந்தப் பிரதே சத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் சொந்தக்காரரும் (a) அவ்வாறு விலக்கிய தேதி, ஓர் அரை ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் இருந்தால், அந்த வீடு விஷயமாய் அந்த அரை ஆண்டுக்குச் செலுத்தத்தக்க வீட்டு வரி முழுமையும் வஜா செய்யப்படுவதற்கு உரிமை யுள்ளவராவார். - (b) அந்தத் தேதி, ஓர் அரை ஆண்டின் கடைசி நான்கு மாதங்களுக்குள் இருந்தால், அந்த வீடு விஷயமாய் அந்த அரை ஆண்டுக்குச் செலுத்தத்தக்க வரியில் பாதி வரையில் வஜா செய்யப்படுவதற்கு உரிமையுள்ளவராவார். அந்தத் தேதிக்குப் பின் அந்த அரை ஆண்டில் இருக்கும் நாட்களின் எண்ணிக்கைக்க ஏற்ற விகிதாச்சாரப்படி அந்த வஜா இருக்க வேண்டும். (3) அந்த வீடு அமைந்துள்ள பிரதேசம் விலக்கப்பு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், வரி வஜாவுக் விண்ணப்பம் ஒன்றை நிர்வாக அதிகாரிக்குச் செய்து கொண்டிருந்தாலொழிய, துணே விதி (2)-ன்படி வரி வஜா எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.