பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12? (ii) அந்த நபர் காணப்படாவிட்டால், அந்த அறிவிப்பை, கடைசியாக அவர் வசித்த, அல்லது வியாபாரம் செய்த இடத்தில், விட்டு வைக்க வேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் உள்ள ஒரு வயது வந்த நபரிடம், அல்லது வேலைக்காரரிடம் அதைச் சேர்ப்பிப்பது, அல்லது, (iii) அந்த நபர் கிராமத்தில், அல்லது நகரத்தில் ஆசிக்காமல் இருந்தால், அல்லது நிர்வாக அதிகாரிக்கு ஆவர் இருக்கும் இடம் தெரியாதிருந்தால், அந்த நபருக்கு பதிவுத் தபால்மூலம் அறிவிப்பைச் சேர்ப்பிப்பது; (iv) மேற்சொன்ன வழிகள் எதிலும் சேர்ப்பிக்க முடியாவிட்டால் அவர் வசிக்கும் இடம், அல்லது வியாபார இடத்தில் ஒரு முக்கியமான இடத்தில் அதை ஒட்டி வைபபது. 8. மேற்படி நபர், ஏதாவது ஒரு கட்டிடத்தின் சொந் தக்காரர் அல்லது அனுபோகதாரராக இருந்தால், மேற்படி அறிவிப்பில், அந்தச் சொந்தக்காரருடைய, அல்லது அனு போகதாரருடைய பெயரை எழுத வேண்டிய அவசியம் இல்லே. கூட்டுச் சொந்தக்காரர்களாக, அல்லது கூட்டு அனுபோகதாரர்களாக இருப்பின், அந்த அறிவிப்பை அத்தகைய சொந்தக்காரர்களில் அல்லது அனுபோக தாரர் களில் ஒருவருக்கு அனுப்பினல் போதும். - 9. சேர்ப்பிக்கப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட ஏதேனும் ஒரு பில், அல்லது அறிவிப்பு, நமூ ைஅல்லது இதர தஸ்தா வேஜில், ஏதாவது ஒரு வரி அல்லது இதர தொகை செலுத் தப்பட வேண்டிய கால அளவு அல்லது ஏதேனும் ஒரு வேலே செய்யப்பட வேண்டிய கால அளவு எச்சரிக்கப் பட்டிருந்தால், அந்தக் கால அளவு மேற்படி சட்டத்தில் அல்லது விதிகளில் மாருக ஏதேனும் மேற்படி பிரிவுகள் இல்லாமலிருந்தால், மேற்சொன்ன பில், அறிவிப்பு, நமூன, தஸ்தாவேஜைச் சேர்ப்பித்த, அல்லது அனுப்புவித்த தேதியி லிருந்து கணக்கிடப்பட வேண்டும்; 10. 6-வது விதியின்கீழ் லேசென்ஸ்ை, அல்லது அனுமதி யைக் காண்பிக்கும்படி கோருகையில் அவ்வாறு செய்யத் தவறும் நபருக்கு ஐந்து ரூபாய் வரையில் அபராதம் விதிக் கப்பட வேண்டும். - 11. இந்த விதிகளிலே, சட்டம்’ என்பது, 1958-ஆம் ஆண்டு சென்னைப் பஞ்சாயத்துச் சட்டம் என்பதாகும்."