உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அந்தத் தேர்தலுக்கு நின்று பெரும்பான்ம்ை ஒட்டுப் பெற்று வெற்றி பெற்ருல் அங்கத்தினராக வர முடியும். தேர்தலுக்கு நிற்பவர் அந்தக் கிராம வாசியாக இருக்க வேண்டும். வாக்காளர் ஜாபிதாவிலே பெயர் உள்ளவர்தான் தேர்தலுக்கு நிற்க முடியும். ஒரு வார்டுக்கு ஒருவர் மட்டுமே அபேட்சகர் பத்திரம் தாக்கல் செய்து, வேறு எவரும் போட்டியிடாமலிருந்தால், அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக் கப்படுவார். போட்டி இருந்தால், அதிகமான ஒட் யார் வாங்குகிருரோ அவரே வெற்றி பெறுவார். 6. பஞ்சாயத்து அங்கத்தினர்கள் எத்தனை பேர் ? . ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அங்கத்தினர்களின் எண் னிக்கை, கிராம ஜனத்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறது. இதை நிர்ணயிக்கும் பொறுப்பு, ஸ்தல ஸ்தாபன இன்ஸ்: பெக்டருடையது. எந்தப் பஞ்சாயத்துக்கும் ஐந்துக்கு குறைவான அங்கத் தினர்கள் இருக்க மாட்டார்கள். எந்தப் பஞ்சாயத்துக்கும் பதினேந்துக்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் இருக்கக்கூடாது. 7. அங்கத்தினர்களுடைய உரிமைகள் எவை? பஞ்சாயத்தின் ஆட்சிக்கு உட்பட்ட விஷயம் குறித்து, சபையில் தீர்மானங்கள் கொண்டுவரலாம். கேள்விகள் கேட்கலாம். குறைகளை எடுத்து உரைக்கலாம், தங்கள் வார்டின் முக்கியமான தேவையை விளக்கலாம். பஞ்சாயத்து வேலை நடக்கும்போது ஏதாவது தவறு ஏற் பட்டால், நிர்வாக அதிகாரியிடம் தெரிவிக்கலாம். நிர்வாக அதிகாரிக்கு முன்னதாகவே தெரிவித்துவிட்டு: பஞ்சாயத்தின் தஸ்தாவேஜுகளைப் பார்வையிடலாம்.