28 8 அங்கத்தினர்களின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்களுடைய பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஒருவர் இரண்டு வருடகாலம் பதவி வகித்திருக்கிருர் : பிறகு, இறந்துவிடுகிருர் அல்லது ஏதோ காரணத்துக்காக விலகிவிடுகிருர் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அந்த ஸ்தானத்தைப் பூர்த்தி செய்ய ஒரு தேர்தல் நடை பெறும். அதை இடைக்காலத் தேர்தல் என்று சொல்லப் படும். அதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர், மீதமுள்ள மூன்று வருடகாலத்துக்கே பதவி வகிக்க முடியும், 9. அங்கத்தினர் தம் பதவியை இழப்பது எப்போது? பஞ்சாயத்துக் கூட்டங்களில் தவருமல் கலந்து கொள்வது அங்கத்தினர்களுடைய கடமையாகும். சேர்ந்தாற்போல் மூன்று மாதகாலம், ஒரு அங்கத்தினர் பஞ்சாயத்துக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்தால் , அவர் பதவியை இழப்பார். ஒரு அங்கத்தினர் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு போகாமல் இருந்தாலும், அவர் தமது பதவியை இழந்து விடுவார். பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தைக் குறித்த காலத்தில் செலுத்தத் தவறுகிறவர்களும் அங்கத் தினர் பதவியை இழந்து விடுவார்கள். 10. பதவி இழந்த அங்கத்தினர் என்ன செய்யலாம் ? " தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பஞ்சாயத்துக் கூட்டத்துக்கு வராததால் உங்களுடைய அங்கத்தினர் பதவியை இழந்துவிட்டீர்கள்’ என்று நிர்வாக அதிகாரியிட மிருந்து ஒரு தகவல் வரும். இந்தத் தவகல் கிடைத்த 15 நாட்களுக்குள், தம்மை மீண்டும் அங்கத்தினராக சேர்த்துக் கொள்ளும்படி பஞ்சா :யத்துக்கு விண்ணப்பம் செய்யலாம். அல்லது நிர்வாக அதிகாரி தம்மைப் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று தகுந்த காரணத்தோடு நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/64
Appearance