பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$32 தேதிக்குப் பிறகு உண்டாகின்ற சந்தன மரங்களின் மீதுள்ள உரிமையும், அரசாங்கத்தினிடமே இருக்கும். அப்படிப்பட்ட மரங்களின்மீது பஞ்சாயத்துக்கு ஒரு உரிமையும் இருக்காது : வடஆற்காடு, தென்ஆற்காடு, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்துனர், நீலகிரி. 24. குறிப்பான உத்திரவுகள் பிறப்பித்து, அரசாங்கம் சில குறிப்பிட்ட வகையான மரங்கள், இந்த உத்தரவின் அமுலிலிருந்து விலக்கப்படலாம் என்றும், அப்படிப்பட்ட மரங்களே, குறிப்பிட்ட அரசாங்கத் துறையினிடம், அதன் உபயோகத்திற்காக ஒப்படைக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கலாம். - 25. இந்த உத்தரவின்படி, பஞ்சாயத்துகளுக்கு மாற்றப் பட்டுள்ள மரங்கள் சம்பந்தப்பட்ட வரையில், பஞ்சாயத்து களுக்கு இந்த மரங்களின் அனுபவ உரிமையை குத்த கைக்கு விடவும், பட்டுப்போன மரங்களே ஏலம் விட்டு விற்பனை செய்யவும் உரிமை உண்டு. அப்படிப்பட்ட குத்தகை விடுவதோ, ஏலம் விடுவதோ பஞ்சாயத்தின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும். பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரி என்ற அதிகாரத்தில், பஞ்சாயத்து தலைவ ர்ால் தனிப்பட்ட முறையில், அவரால் இந்தக் காரியங்கள் செய்யப்படக்கூடாது. குத்தகை, ஏலங்கள், விற்பனேகள் எல்லாம் பஞ்சாயத்து சட்டப்படி நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். 26. இந்த உத்தரவு உடனே அமுலுக்கு வரும். மாவட் டக் கலெக்டர்கள் இந்த உத்தரவை உடனே எல்லா பஞ்சா யத்துகள், பஞ்சாயத்து யூனியன்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், அதன்படி நடவடிக்கை எடுக்கும் படியும் செய்ய வேண்டும். இந்த உத்தரவை கால தாம்த மில்லாமல் நிறைவேற்றி வைக்க தங்களின்கீழ் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் போதிய அறிக்கைகளே ரெவின்யு போர்டும், அரசாங்க இலாகாதலைவர்களும் உடனே அனுப் பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிருர்கள். [G.O. No. 1550, R.D. and L.A. 30-5-1961.]