32 அது குறித்து எவ்விதமான விவாதமும் கூடாது. தாசில் தாரும் எதுவும் சொல்லக்கூடாது. பிரேரணையை பஞ்சாயத்து ஆதரித்தோ, நிராகரித்தோ தீர்மானம் செய்யலாம். அந்த முடிவை தாசில்தார் உடனே, இன்ஸ்பெக்டருக்கு தெரிவிக்க வேண்டும். பிரேரணையை பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டால் இன்ஸ் பெக்டர் உடனே விளம்பரம் பிரசுரித்து மேற்படி தலைவரைப் பதவியிலிருந்து விலக்கிவிடலாம். துணைத்தலைவரைப் பதவியிலிருந்து நீக்கவும் இதே முறை. யைத்தான் பின்பற்றப்பட வேண்டும். 女 女 女 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர் அல்லது துணைத் தலைவன்ரயும் இம்முறையில்தான் பதவியிலிருந்து விலக்கலாம். இவர்கள் விஷ ய த் தி ல் இன்ஸ்பெக்டருக்குப் பதிலாக அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பவேண்டும். கூட்டத்தை தாசில்தாருக்குப் பதிலாக ர்ெவினியூ டிவிஷனல் அதிகாரி நடத்துவார். 17. தலைவர் பதவி காலியானல் என்ன செய்வது? பொதுவாக தலைவர் பதவி ஐந்து வருட காலம், அதா வது ஒரு பஞ்சாயத்தின் ஆயுட் காலமும் ஐந்து வருடம்தான்! இதற்கிடையில் _ எந்தக் காரணத்தினலோ அந்தப்பதவி கிர்லியானல் துணைத்தலைவரே தலைவராக இருந்து வருவார். புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடை பெற்று, அவர் பதவியேற்றுக் கொள்ளும்வரை துணைத்தலைவர் அந்தப் பொறுப்பை வகிக்க வேண்டும். அப்போது தலைவ ருக்கு உரிய எல்லா அதிகாரங்களும் அவருக்கு உண்டு. புதிய தலைவர் பதவியேற்றுக் கொண்டதும் அவரிடம் துணைத்தலைவர், தாம் அதுவரை வகித்துவந்த அதிகாரங்களே யும் பொறுப்புகளையும் ஒப்படைத்து விட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் சட்டப்படி குற்றம். 1000 ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படலாம். தலைவர் ஸ்தானம் காலியானல் அதிலிருந்து மூன்று நாட்களுக்குள் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/68
Appearance