217 தொகையை அளிப்பார். காவியர் அவர் செலுத்திய தொகையை, எண்கள் குறிப்புப் புத்தகத்தின் எண்ணுடன் சேர்த்துப் பணம் செலுத்தியதற்கான பதிவேட்டில் (W.P.C. நமூணு எண் 7) குறித்துக்கொள்வார். பஞ்சாயத்துத் தலைவர் கள் பட்டுவாடா உத்தரவுகள்மீது தொகை மாற்றுவதற்காக பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு அவர்கள் வர இயலாதபோது, பட்டுவாடா உத்தரவின் பின்பக்கத்தில் பட்டுவாடா உத்தரவு கொண்டு செல்பவரின் கையொப் பத்தை பெற்றுத் தாங்களே மேற் கையெழுத்திடும் முறை அடையாளம் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தும் சரியான முறையாகக் கொள்ளப்படும். அவ்வாறு செலுத்தப்பட்ட பட்டுவாடா உத்தரவு வவுச்சர் நிலையில் கொள்ளப்படும்; அந்த நாளின் முடிவில், அதை மானேஜர், அக்கெளண் டெண்ட் ஆகியோரின் எண்கள் குறிப்புப் புத்தகங்களுடனும் பணம் செலுத்தியதற்கான பதிவேட்டுடனும், ஒப்பு நோக்கிப் பார்த்த பிறகு, அக்கெளண்டெண்டிடம் அளிக்கப்படும். அவர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக் கணக்கில் பற்று எழுதுவார். 88. கிராம அதிகாரிகள் ஆற்ற வேண்டிய பணிகள், அபிவிருத்தி படிகள் 1. புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின்படி, பஞ்சாயத்து களும் பஞ்சாயத்து யூனியன்களும் ஏற்படுத்தப்பட்டு, அவற் றிடம் ஸ்தல ஸ்தாபன ஆட்சிப் பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். இந்த நிறுவனங்களில்ை விதிக்கப்படும் சில வரி களுக்கு ஈடாக அரசாங்க அதிகாரம் பெற்ற சில மான்யங்கள் அவைகளுக்கு அளிக்கப்பட சட்டம் வகை செய்கிறது. அத்துடன் சட்டத்தின் 6ே-வது பிரிவுப்படி சமுதாய நல அபிவிருத்தி திட்டத்தின் தேசீய வளர்ச்சி திட்ட வேலைகளே பஞ்சாயத்து யூனியன்களின் வசம் ஒப்படைக்க வழி செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, விவசாய அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, கிராமக் கைத்தொழில் அபிவிருத்தி ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும். 2. இப்படிப்பட்ட முக்கியமான வேலைகளே பஞ்சாயத்து யூனியன் வசம் ஒப்படைக்கும்பொழுது, ஒவ்வொரு பஞ்சா யத்து அபிவிருத்தி வட்டாரத்தில் அமைக்கப்படும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனும் (அந்த வட்டாரத்தில் இயங்கும் பஞ்சாயத்துகளின் ஒத்துழைப்புடன்) மூன்ருவது ஐந்தாண்டு III-15
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/704
Appearance