உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 யைச் சமாளிக்க ஒரு சுமுகமான வழி வகையைச் சொல்லி யுள்ளார். அதன்படி, பஞ்சாயத்து அபிவிருத்தி சம்பந்தப் பட்ட வேலேகளில் கிராம உத்தி யோகஸ்தர்களின் கடமைகள் வரையறை செய்யப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும். அப்படி அவர்கள் செய்கின்ற பணிகளுக்கு ' பஞ்சாயத்து அபி 67(535i Liq.356T * (Panchayat Development Allowance) என்ற வடிவில் கூடுதல் ஊதியம் அளிக்கப்பட வேண்டும். 6. கிராம ரெவினியு வே லே க ள் சம்பந்தப்பட்ட அளவில் எதிர்காலத்தின் அமைப்புமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற பிரச்னையை மனத்திலிருத்தி, அரசாங்கம் இந்த ஆலோசனைகளே பரிசீலனே செய்து பார்த்தது. அரசாங்கத்தின் பகுதிநேர உத்தியோகஸ்தர்கள் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கிராம உத்தியோகஸ்தர் களின் ஊதியங்கள் அதிகமாக்கப்பட வேண்டும் என்று கிராம உத்தியோகஸ்தர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளனர். கிராம ரெவினியு வேலே முறைகளே பொது வாக சீரமைப்பு செய்யும் ஒரு பகுதியாக, இதல்ை அவர் களின் எண்ணிக்கை ஒரளவுக்கு குறையும் இந்தப் பிரச்இன எடுத்துக்கொள்ளப்பட்டாலன்றி, அவர்களுடைய ஊதியங் களே அதிகப்படுத்துவது என்பது இயலாததாக இருந்தது. அப்படி கிராம ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ருல், இப்பொழுது ரெவினியு கிராமங்களில் எல்லேகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிற முறை பெருவாரி யான முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அத்துடன், பரம்பரை பரம்பரையாக தற்சமயம் உத்தியோகம் கொடுக்கப்பட்டு வருகின்ற முறையையும் ஒரேயடியாக மாற்றி அமைக்க வேண்டும். புதிய பஞ்சாயத்துச் சட்டத்தை அமுல் நடத்துவதையும், அபிவிருத்தி வேலே களின் பொறுப்பை பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சாயத்து யூனியன்களுக்கும் ஒப்படைப்பது, ஆகிய இதல்ை ஏற்படு கின்ற அவசரமான முக்கிய நிர்வாக வேலைகளில் இப் பொழுது முழுக்கவனமும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதால், தற்சழயத்திற்கு இந்தச் சீரமைப்புக்கான ஆலோசனைகளைச் சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது என்று அரசாங்கம் கருதுகிறது. இப்பொழுது இருக்கும் கிராம ரெவினியு அமைப்பு முறை இன்னும் கொஞ்ச காலத்திற்கு அப்படியே நீடிக்கலாம் என்றும். அரசாங்கம தருதுகிறது. இந்த முடிவையொட்டி கிராம அதிகாரிகளுக்குத் தரப்படும் பஞ்சாயத்து அபிவிருத்தி