பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அங்கத்தினர் உள்ளூரில் இ ல் லா ம ல் , வெளியூர் போயிருந்து, அவருடைய வெளியூர் விலாசம் தெரிந்தால், பதிவுத் த்ப்ால் மூலம் அவருக்கு நோட்டீசை அனுப்பி வைக்கலாம். இந்த இரண்டு வழிகளும் இல்லாவிட்டால் மேற்படி அங்கத்தினர் வசிக்கும் வீட்டிலோ, தொழில் செய்யும் இடத்திலோ எளிதிற் கண்ணிற் படும்படியான இடத்தில் நோட்டீசை ஒட்டி வைத்துவிடலாம். 23. நோட்டீஸ் எப்படி இருக்க வேண்டும்? நோட்டீஸ் என்பது கூட்டம் பற்றிய அறிவிப்பு. அது தெளிவாக இருக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றை அதிலே குறிப்பிட்டிருக்க வேண்டும். அஜண்டாவும் (நிகழ்ச்சி நிரல்) அத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்த நோட்டிசை தனித் தனியே ஒவ்வொரு அங்கத் தினருக்கும் அனுப்பலாம். அல்லது ஒரு நோட்டுப் புத்தகத்திலே எழுதி, எல்லா அங்கத்தினர்களிடமும் காட்டி வாசிக்கச் சொல்லலாம். - அதை அவர் தெரிந்து கொண்டார் என்பதற்கு அத் தாட்சியாக நோட்டுப் புத்தகத்திலேயே அவருடைய கையொப்பத்தை தேதியுடன் வாங்கிக் கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம். எனக்கு நோட்டீஸ் வரவில்லை’ என்று எந்த அங்கத்தினரும் புகார் சொல்ல முடியாது அல்லவா ? 24. நோட்டீஸ் கொடுக்காவிட்டால் என்ன? நோட்டீஸ் கொடுக்க வேண்டியது சட்டப்படி செய்ய வேண்டிய கடமையாகும். நோட்டீஸ் கொடுக்காவிட்டால் வேண்டும் என்றே சட்டத்தை மீறி, கடமையில் தவறிஞர் ' என்ற குற்றச்சாட்டு வரும்.