உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 சொத்துகள், பஞ்சாயத்து யூனியன் சொத்துகள் ஆகிய வற்றைக் காவல் புரிந்து, பாதுகாத்து வருவதற்கு அவர் பொறுப்பாளியாக இருக்க வேண்டும். குறிப்பு.-எந்தக் கிராமத்திலாவது ஒன்றுக்கு மேற்பட்ட தலையாரிகள் இருந்தால், அவர்களில் குறிப்பிட்ட ஒருவருக்கு இந்த வேலையை, தாசில்தார் ஒதுக்க வேண்டும். வேலையை பிரதேச வாரியாகப் பிரித்துச் செய்ய முடியுமானல், ஒன்றுக்கு மேற்பட்ட தலையாரிகளிடையே அந்த வேலே யையும் அதற்கு உரிய ஊதியத்தையும் பிரித்து அளிக்கவும், தாசில்தார் உசிதம்போல நடவடிக்கை எடுக்கலாம், 12. பிரதேசப் பொறுப்புகளை வகைப்படுத்தல் கிராம அதிகாரிகளின் பிரதேசப் பொறுப்புகள், செய்யப் படுகின்ற வேலைகளின் வித்தியாசங்களுக்கேற்ப, மாறி மாறி இருக்கும். ஆகையில்ை, அனுமதியளிக்கப்படுகிற ஊதியத் தையும், படிகளேயும் நிர்ணயிக்கும்பொழுது சாதாரண பொறுப்புகள்’’ என்றும், லகுவான பொறுப்புகள்’’ என்றும் பிரிவு படுத்துவது விரும்பத்தக்கது. அதன்படி கீழ்கண்ட இரண்டு வசதிகளேப் பெற்று இருந்தால் ஒரு கிராமம் சாதாரண பொறுப்புகள்’’ என்ற தலைப்பில் வகைபடுத் தப்படும்: (i) அந்தக் கிராமத்தில் மொத்தம் பட்டா நிலம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்; அல்லது (ii) கிராமத்தின் பட்டா நிலங்களின் மூலம் வருகின்ற நிலவரி வருமானம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு நிபந்தனேகளில் ஏதாவது ஒன்ருவது இல்லாத கிராமம் லகுவான பொறுப்பு’’ உள்ளது என்ற தலைப்பில் வகைப்படுத்தப்படும். அரசாங்கம் இந்த ஆலோசனைகளே ஏற்றுக்கொள்கிறது. 13. பஞ்சாயத்து அபிவிருத்தி அலவன்ஸ்டுகளின் கிதம் கர்ணங்கள், பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிராமக் கர்ணத்தின் பஞ்சா