226 யத்து அபிவிருத்தி அலவன்ஸ் கீழ்க்கண்ட முறையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் : (i) அவர் சாதாரண பொறுப்பு’’ உள்ள கிராமத்தின் கீழ் வந்தால், அவர் செய்ய வேண்டிய அலுவல்களில் ஒரு கிர்ாமப் பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல் உள்ளிட்ட வேலேயும் செய்யவேண்டி இருந்தால், ஒரு மாதத்திற்கு 15 ரூபாய் படியாக அளிக்கப்பட வேண்டும். (ii) (a) கிராமப் பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல் வேலேயும் சேர்ந்திருந்து, அவர் ஒரு லகுவான பொறுப்பு?? பிரிவின் கீழ் இருந்தால், அல்லது (b) ஒரு சாதாரண பொறுப்பு உள்ள கிராமமாக இருந்து, அவர் செய்கின்ற அலுவல்களில் கிராமப் பஞ்சா ய்த்துச் செயலாளரின் அலுவல்கள் சேராமலிருந்தால் மாதத் துக்கு 12 ரூபாய் அளிக்கப்பட வேண்டும். (iii) ஒரு "லகுவான பொறுப்பு’’ இருந்து அவர் செய்கின்ற அலுவல்களில் கிராம பஞ்சாயத்துச் செயலாளரின் அலுவல்கள் சேராமல் இருந்தால், மாதத்துக்கு 10 ரூபாய் அளிக்கப்பட வேண்டும். 14. பஞ்சாயத்து அபிவிருத்தி அலவன்ஸ்டுகளின் விகிதம்-மணியக்காரர். ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் சேர்க்கப் பட்டு உள்ள ஒவ்வொரு கிராமத் தலைவருக்கும் பஞ்சாயத்து அபிவிருத்திப் படியானது கீழ்க்கண்ட முறையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் : () சாதாரண பொறுப்பு உள்ள கிராமமாக இருந் தால் மாதத்துக்கு ஏழு ரூபாயும், 哈 '(ii) "லகுவான பொறுப்பு’’ உள்ள கிராமமாக இருந் தால் மாதத்துக்கு ஐந்து ரூபாயும் அளிக்கப்பட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/713
Appearance