37 ஆலோசனையில் இருக்கும் விஷயத்தை விட்டு விட்டு; அங்கத்தினர்களின் பேச்சு வேருென்றுக்குத் தாவாமல் தடுக்க வேண்டும். - அஜண்டாவில் கண்ட விஷயங்களை அந்தந்தக் கூட்டத்தி லேயே பைசல் செய்துவிட வேண்டும். அநாவசியமாக ஒத்தி வைக்கக் கூடாது.
- கோரம் இல்லாமல் கூட்டத்தை அடிக்கடி ஒத்தி வைத்துக் கொண்டே இருப்பதும் கூடாது. -
அஜண்டாவில் கண்ட விஷயங்கள் முடிந்ததும் அரசாங் கத்தாரிடமிருந்து முக்கியமான உத்தரவுகள் அல்லது அறிக் கைகள் வந்திருந்தால் அதை அங்கத்தினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 25. துணைத் தலைவரின் கடமை என்ன ? துணைத்தலைவருக்கு தனியே எவ்வித அதிகாரமும் கிடை யாது. தலைவருக்கு உதவியாக இருக்க வேண்டியவர் அவர். தலைவர் இல்லாதபோது, பஞ்சாயத்துக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்து, ஒழுங்காக நடத்த வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் தலைவருக்கு உள்ள சகல அதிகாரங்களும் கடமைகளும் அவருக்கு உண்டு. 27. தலைவர் வராவிட்டால் என்ன செய்வது? பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் ஆகியவற்றின் கூட்டங்களுக்கு அதனதன் தலைவர்களே தலைமை வகிக்க வேண்டும். கூட்டத்துக்கு தலைவர் வரவில்லையாளுல் துணைத்தலைவர் தலைமை வகிக்கலாம், தலைவர், துணைத்தலைவர் ஆகிய இருவருமே வரவில்லை யென்ருல், வந்திருக்கும் அங்கத்தினர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை மேற்படி கூட்டத்துக்கு தலைவராக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் ஒரு அங்கத்தினர் கூட்டத்துக்கு தலைமை வகிக் கும் போது சபையை நடத்துவதற்கான சகல உரிமைகளும் அவருக்கு உண்டு. -