பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்து வேறுபட்ட ஓரிடத்தில் வசித்து வந்தால், அவரது பிரயாணப் படியைக் கணக்கிடும் காரியத்திற்காக, அவர் வசிக்கும் இடம் அவரது தலைமை இடமாகக் கருதப்படும். விளக்கம் :-இந்த விதியின் காரியத்திற்காக மன்றத் தலைவர் என்பதில் மன்றத் துணேத் தலைவர் என்பதும் அடங்கும். ஆனால், மேற்படி சட்டத்தின் 37-வது பிரிவைச் சேர்ந்த (6) உட்பிரிவில் குறிப்பிட்டுள்ள அதிகாரம் பெற்ற மன்றத் தலைவர்” என்பது அதில் அடங்காது. 6. ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றத் தலைவர், பஞ்சா யத்து யூனியன் பகுதியின் அதிகார வரம்பிற்கு வெளியே யுள்ள ஓர் இடத்தில் வசித்து வந்தால், பஞ்சாயத்து யூனியன் அதிகார வரம்பிற்குள் அவர் செய்யும் பிரயாணங்களுக்கு மட்டுமே பிரயாணப் படி பெற அவர் உரிமையுள்ளவராவார். 7. ஒரு பஞ்சாயத்து யூனியன் தலேவர், துணைத் தலே வர், அதிகாரம் பெற்ற தலைவர் அல்லது அங்கத்தினர் பஞ் சாயத்து யூனியன் அதிகார வரம்பிற்கு வெளியேயுள்ள் இடங்களுக்கு பஞ்சாயத்து யூனியன் அலுவல் சம்பந்தமாகப் பிரயாணம் செய்யலாம். பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் முன் அனுமதியுடன் அந்தப் பிரயாணங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தால், அந்தப் பிரயாணங்களுக்காகப் பிரயானப் படிகளே அவர் கேட்டுப் பெறலாம். 3. பஞ்சாயத்து யூனியன் மன்றக் கூட்டம் அல்லது நிலக் கமிட்டி அல்லது இதர கமிட்டி கூட்டம் அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றக் கூட்டங்கள் அல்லது அத் தகைய ஏதாவது ஒரு கமிட்டி அல்லது கமிட்டிகளின் கூட்டங்கள் அல்லது ஆத்தகைய கமிட்டிகளின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கமிட்டிகளின் கூட்டங்கள் இரண்டு தினங்கள் அல்லது அதற்கு மேற்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டால், கூட்டம் நடக்கும் இடத்திற்குப் ப்ோங் திரும்புவதற்கு செய்த பிரயாணத்திற்கு மட்டுமே பிரயானப் படி கொடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர், ஒவ்வொரு நாளும் கூட்ட முடிவில் அந்த இடத்தைவிட்டுச் சென்று, அடுத்த நாள் மீண்டும் கூட்டத்திற்குத் திரும்பி வந்தால், அதற்காக அவருக்குப் பிரயாணப் படி வழங்கப்படமாட்டாது. ஆல்ை, வேறு விதத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பின், இதர தினங் களுக்காகத் தினப் படி கொடுக்கப்படும்.