251 மாய் விசேஷமாக கூட்டப்படும் கூட்டம் ஒன்றில் மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அனுமதிக்கப்பட்ட அங்கத்தி னர்களில் பாதிபேருக்குக் குறையாத அங்கத்தினர்கள் அதை ஆமோதிப்பதன் மேல் அது மாற்றி அமைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். 9. மன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகளும் அந்தக் காரியத்திற்காக வைக்கப்பட்டுள்ள புத்தகம் ஒன்றில் எழுதப்பட வேண்டும். தலேமை வகிக்கும் அங்கத்தினர் அல்லது அவர் வந்திராவிட்டால் வந்திருக்கும் அங்கத்தினர்களில் ஒருவர் அதில் கையொப்பமிட வேண்டும். இந்தச் சட்டத்தின்கீழ் பஞ்சாயத்து யூனியனுக்கு வரிசெலுத் தும் யாராவது ஒரு நபர், மேற்படி நடவடிக்கைக் குறிப்புகளே கட்டணங்கள் எதுவுமின்றி பார்வையிட நியாயமான எல்லா நேரங்களிலும் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அவை வைத்திருக்கப்பட வேண்டும். 10. மன்றத்தின் நடவடிக்கைக் குறிப்புகளேயும், பதி வேடுகளேயும் கமிஷனர் தம் பொறுப்பில் வைத்துவர வேண் டும். மன்றம், பொதுவான அல்லது விசேஷ அறிவிப்பு மூலம் நிச்சயிக்கும் கட்டணங்கள் செலுத்தப்படுவதன்மேல் அந்த நடவடிக்கைக் குறிப்புகளின் நகல்களேயும், பதிவேடுகளின் நகல்களேயும் அவர் வழங்கலாம். 1872-ம் ஆண்டு இந்திய &Tlléâu să &LL-35.6%r [Indian Evidence Act] 76–615, 1%fołóð வகை செய்துள்ளபடி, கமிஷனர் அந்த நகல்களுக்கு சான்று கூற வேண்டும். அவ்வாறு சான்று கூறப்பெற்ற நகல்கள், மேற்படி சட்டத்தின் 73-வது பிரிவைச் சேர்ந்த (5) உட் பிரிவின்கீழ் மன்ற நடவடிக்கைகளே நிரூபிக்கப் பயன்படுத்து வதைப் போலவே, மன்றத்தின் பதிவேடுகளே நிரூபிக்கப் பயன்படுத்தலாம். 11. 58-வது பிரிவின்கீழ் மன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டியின், 1-வது விதியின்கீழ் பஞ்சாயத்து யூனியன் ஏற்படுத்திய அலுவலகத்தில் சபை கூடவேண்டும். 12. மன்றத்தால் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிட்டி யின் நடவடிக்கைகளும் எழுத்து மூலம் பதிவு செய்யப்பட்டு மன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/737
Appearance