உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 4. நடவடிக்கைக் குறிப்புகளிலிருந்து அல்லது பதி வேட்டிலிருந்து நகல் ஒன்றை அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதி ஒன்றை வழங்குவதற்குச் செலுத்தத்தக்க கட்ட ணத்தை கமிஷனர், விண்ணப்பதாரருக்கு அறிவிக்க வேண்டும். அந்தக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதன் மேல் நகல்களே அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதிகளேத் தயாரிக்க அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். நகல்கள், அல்லது எழுதப்பட்ட பகுதிகள் அலுவலகத்தில் சரிபார்க்கப் பட்ட பிறகு, அவர் அவற்றிற்குச் சான்று கூறுவார். விண் ணப்பதாரர் நேரில் வந்தால் அவருக்கு அவை வழங்கப்படும்; அல்லது விண்ணப்பதாரர் போதிய அளவுக்குத் தபால் தலைகள் அனுப்பி யிருந்தால், தபால் மூலம் அவருக்கு அனுப்பப்படும். 5. தேடு கூலியை அல்லது நகல் எழுதுவதற்கான கட்டணங்களேச் செலுத்தும் ஒவ்வொரு நபருக்கும் கமிஷனர் அல்லது இது விஷயமாய் அவரது அதிகாரம் பெற்றவர் கையொப்பமிட்ட ஒரு ரசீது வழங்கப்பட வேண்டும். - .ே ஏதாவது ஒரு நடவடிக்கைக் குறிப்பு அல்லது பதி வேட்டிலிருந்து நகல் அல்லது எடுத்து எழுதப்படும் பகுதிகள் வழங்குவது ஆட்சேபகரமானது என்று கமிஷனர் கருதில்ை, அவர் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். அதற் கான காரணங்களே அவர் அதில் எழுதுவார். - 15. தஸ்தாவேஜூகளே கமிஷனர் கொண்டுவந்து காட்டுதல் (ப. ச. 50.) விதி கமிஷனரிடம் உள்ள ஏதாவது ஒரு தஸ்தாவேஜைக் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்று பஞ்சாயத்து யூனியன் மன்றம் கேட்டுக்கொண்டால், அவர் அவ்வாறே செய்ய வேண்டும். ஆனால், உடனடியாக அவ்வாறு செய்வது பஞ்சாயத்து யூனியனின் நலனுக்கு உகந்ததல்லவென்று அவர் கருதில்ை, அவ்வாறு செய்ய வேண்டியதில்லே. அந்த விஷயத்தில்: அவர் அதுபற்றி எழுத்து மூலமான அறிக்கை ஒன்றைக் கொடுக்க வேண்டும். மேலும் பஞ்சாயத்து யூனியன் மன்றம் கேட்டுக்கொள்வதன் மேல் அவர் அந்த விஷயத்தை இன்ஸ்பெக்டருக்கு அல்லது இது விஷயமாய்