பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 யில், பஞ்சாயத்து யூனியன் மன்றம் லேசென்ஸை எந்த நிபந் தனகளுக்குட்பட்டு வழங்கலாம் என்று நிர்ணயிக்கலாம். பஞ்சாயத்து யூனியன் மன்றமும் லேசென்ஸ் வழங்குவதற்கு முன் அந்த நிப்ந்தனைகளே லேசென்ஸில் குறிப்பிட வேண்டும். இந்தத் துணைவிதியின்கீழ் வழங்கிய லேசென்ளை மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத கால அளவுக்குப் புதுப்பிப்பதாக இருந்தால், அவ்வாறு லேசென்ஸைப் புதுப்பிக்கக் கலெக் டரின் அனுமதி தேவையில்லே. (5) ஒரு வளவுக்குச் செல்வதற்கு அவசியமான படிக்கட்டுகள் அல்லது அந்த வளவுக்குத் தேவையான வடிகால் மூடிகளைக் கட்டுவதற்கான லேசென்ஸை அடியிற் கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்க வேண்டும் இந்த நி ப ந் த னே க ள் லேசென்ஸிலேயே கண்டிருக்க வேண்டும். (i) படிக்கட்டுகள் அல்லது வடிகால் மூ டி க ள் தெருவில் நீட்டிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு வளவுக்குச் செல்ல அவசியமானதும், ரஸ்தாவை நேரடியாக ஒட்டி யுள்ளதுமான படிக்கட்டு அல்லது வடிகால் மூடி, குடியிருப் பிடங்களின் விஷயத்தில் மூன்று அடி நீளத்திற்கு மேற்பட் டிருக்கக்கூடாது; கடைகள் அல்லது வியாபார ஸ்தலங்கள் விஷயத்தில் ஐந்து அடி நீளத்திற்கு மேற்பட்டிருக்கக்கூடாது. இருபது அடி நீளத்திற்குக் குறைவான முகப்பு உள்ள கடைகள் அல்லது வியாபார ஸ்தலங்கள் விஷயத்தில் ஒரு வரிசைப் படிக்கட்டுகள்தான் இருக்க வேண்டும். முன்னுல் புறமதில் அமைந்துள்ளவைகளும் வடிகால் மூடி மீது வண்டிகள் செல்லத்தக்கதுமான வளவுகள் விஷயத்தில் மேற்படி கமிஷனர் மூடியின் நீளத்தை நிச்சயிக்க வேண்டும். (ii) மழைத் தண்ணிர் இறங்கும் பொருட்டு அமைக் கப்படும் குழாய்கள், வடிகாலில் நேரடியாக இறங்கும் வண்ணம் வடிகால் சுவருடன் நன்ருகப் பொருத்தப்பட வேண்டும். (iii) வடிகால் மூடி ரஸ்தாவுடன் ஒட்டியிருக்கும் வளவுகள் விஷயத்தில், வடிகாலின் அளவுக்குத் தக்கவாறு ஆறு முதல் முப்பத்தாறு அங்குலமுள்ள வடிகால்கள் விஷய மாக 2 முதல் 4 அங்குலம் கனமுள்ளதாய் இருக்கவேண்டும் புறமதில் அமைந்துள்ள வீடுகள் விஷயத்தில், வடிகால் மீது கனரக வண்டிப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் மூடி உறுதிப்படுத்தப்பட்ட கான்க்ரீட் அல்லது