273 2. சந்தா வசூலித்தல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒரு பொதுக் காரியத்திற்காக அல்லது உள்ளுர் காரி யத்திற்காகச் சந்தா வசூலிப்பதில் பங்கு எடுத்துக்கொள்ளக் சிட்டாது. ஆல்ை, மேற்படி கமிஷனர், ஆண்களுக்கான ஆரம்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விஷயத்தில் சீனியர் டெபுடி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸும் பெண்களுக்கான ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள் விஷயத் §6ö, Sub Assistant Inspectress of Schoolsth 569 figFir(360T சித்து அடியிற் கண்ட காரியங்களுக்காகச் சந்தா வசூலிக்க ஆசிரியர்-ஆசிரியைகளுக்கும் அனுமதி அளிக்கலாம். (i) பள்ளித் தினக் கொண்டாட்டம் அல்லது பெற் ருேர் தினக் கொண்டாட்டம், இதில் வகுப்பு வேலே, விளையாட்டுகள், மாணவர்களால் நடத்தப்படும் கேளிக் கைகள் ஆகியவற்றிற்காக வசூலிக்கப்படும் தொகைளும் அடங்கும்; (ii) ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணங்கள், புத்தகங்கள், உணவு ஆகியவற்றிற்கான ஏழை மாணவர் நிதி ; (iii) பள்ளிச் சுற்றுலா; (iv) கல்வி சம்பந்தமான கண்காட்சிகள், பிரசாரம்; பள்ளியின் தலேமை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியை இது குறித்து வரவு செலவு கணக்குகளேச் சரியாக வைத்து வரவேண்டும். பள்ளித் தலேமை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியை ஒவ்வொரு காரியத்திற்காகவும் வசூலித்த தொகைகள், செலவழித்த தொகைகள் குறித்து தனித் தனியாகக் கணக்கு வைத்து வர வேண்டும். அந்தக் கணக்கை விழா நடை பெற்ற ஒரு வாரத்திற்குள் அல்லது இதர விஷயங்களில், கனக்குகளே தீர்த்த பிறகு கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். இந்தக் கணக்குகளே, பார்வையிடும் அலுவலர்கள் பரிசீலனை செய்யும் பொருட்டுத் தயாராக வைத்திருக்க வேண்டும். செலவழிந்தது போக எஞ்சிய தொகையை தபால் நிலேயத்தில் சேமிப்புப் பாங்கியில் போட்டு வைக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/759
Appearance