பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 யத்தைப்பற்றி கேள்வி எழுப்பச் செய்தால் அவர் இந்த விதியை மீறினவராவார் 19. மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதுதல், பேட்டி காணுதல் (1) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் தமக்கு உடனடியான மேலதிகாரியைத் தவிர வேறு ஒரு மேலதிகாரிக்கு அவரது அலுவலகப் பணிகள், மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் என்ற முறையில் தம்மைப் பாதித்த விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி நேரடியாக எழுதக் கூடாது. குறிப்பு (1) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் தமது உடனடியான மேலதிகாரியின் மூலமாக விண்ணப்பம் அனுப்பியிருக்கும் விஷயத்தில், தாம் விரும் பில்ை, மேற்படி விண்ணப்பத்தின் நகல் ஒன்றை தமது மேலதிகாரிக்கு நேரடியாக அனுப்பலாம். (2) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் தமக்கு உடனடியான மேல் அதிகாரி நீங்கலாக வேறு யாரையும், அவர் உத்தியோகச் சார்புள்ள வராயினும் சரி, உத்தியோகச் சார்பற்றவராயினுஞ் சரி, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் ஓர் அலுவலர் அல்லது ஊழியர் என்ற முறையில் தம்மைப் பாதித்த விஷயங்கள் பற்றி அவருடைய ஆதரவைப் பெறுவதற்கோ சான்றிதழைப் பெறுவதற்கோ அணுகக்கூடாது. (3) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் அவருடைய உடனடியான மேலதி காரியின் முன் அனுமதி பெற்றுக்கொண்டாலன்றி வேறு மேலதிகாரிகளே, பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் என்னும் முறையில் தம்மைப் பாதிக்கும் ஏதாவது ஒரு விஷயம்பற்றி பேட்டி காணக் கூடாது. மேலும், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் அமைச்சர் அல்லது அரசாங்கக் காரிய தரிசியைப் பேட்டி காணக்கூடாது. (4) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒரு நியமனத்திற்காக அல்லது உத்தியோக உயர்