30i கொண்ட நபர்கள் எல்லோரும் அவர்கள் செய்துகொண்ட குத்தகை விதி முறைகளுக்கு அல்லது ஒப்பந்த விதி முறை களுக்கு உட்பட்டவர்களாவர். 2-வது 3-வது விதிகளின் பிரிவுகளே அனுசரித்தன்றி மற்றபடி அவர்களுக்க எந்தத் தள்ளுபடியும் (வஜா) வழங்கப்படாது. 2. குத்தகைக்காரர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் தள்ளுபடிகள் வழங்குதல் அடியிற்கண்ட நிபந்தனேகளுக் கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாகும்: (a) குத்தகைக்காரர் அல்லது ஒப்பந்தக்காரர் தம் முடைய குத்தகையைத் தொடர்ந்து நடத்துவதனின்றும் அல்லது ஒப்பந்தக்காரர் தம்முடைய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நடத்துவதனின்றும் தவிர்க்கமுடியாத, முன்பே எதிர்பார்க்க இயலாத அடிப்படையில் உள்ள சம்பவத்தின் காரணமாகத் தடுக்கப்பட்டால், தள்ளுபடி வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, கொள்ளே நோய் பரவுவதன் காரணமாகக் குத்தகைக்கு விடப்பட்ட பொதுச்சந்தை மூடப் பட்டால் அப்போது தள்ளுபடி வழங்கப்படலாம்; (b) வழங்கப்பட்ட தள்ளுபடி தொகை, மேற்குறிப் பிட்ட அசாதாரண காரணத்தால் தன்னுடைய குத்தகை அல்லது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றுவதினின் றும் குத்தகைக்காரர் அல்லது ஒப்பந்தக்காரர் தடுக்கப்பட்ட கால அளவிற்குக் குத்தகை அல்லது ஒப்பந்தத்தின் கீழ் கொடுக்கப்படும் விகிதாச்சாரத் தொகையை மிஞ்சக்கூடாது. (c) அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, ஜம் பது ரூபாய்க்கு மேற்பட்டால், கலெக்டரின் முன்அனுமதி பெற்ருக வேண்டும். - 3. குத்தகை அல்லது ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளே யொட்டி, குத்தகை அல்லது ஒப்பந்தத்தில் சொல்லிய தண்டனைகளே திட்டவட்டமாக நிறைவேற்ற வேண்டும். குத்தகை அல்லது ஒப்பந்தத்தின்படி, பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகையை கால தாம தமாகக் கொடுத்தால், பஞ்சாயத்து யூனியன் மன்றத்திற் குக் கொடுக்கப்பட வேண்டிய தொகையை தவனே முறை யில் மிகச் சரிவரச் செலுத்தப்படுவதாக மேற்படி மன்றம் கரு திலுைம், குத்தகை அல்லது ஒப்பந்தம் இவற்றின்படி பஞ்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/787
Appearance