உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 கத்தார், ஊழியர்களின் எண்ணிக்கையை அடியிற் கண்ட வாறு நிச்சயித்துள்ளனர் : (1) ஒரு வட்டார அபிவிருத்தி அதிகாரி ; (2) ஒரு அபிவிருத்தி உதவியாளர் ; (8) ஒரு கணக்கர், பண்டகசாலைப் பொறுப்பாளர் ; (4) ஒரு சீனியர் குமாஸ்தா ; (5) ஒரு காஷியர் ; (6) ஒரு டைப்பிஸ்ட் ; (7) நான்காம் வகுப்பு ஊழியர்கள் நான்கு பேர். மேலே சொன்ன ஊழியர்களுக்காக ஏற்படும் செலவை இந்திய அரசாங்கத்தினரும் ராஜ்ய அரசாங்கத்தினரும் பகிர்ந்து கொள்கின்றனர். 2. ஒரு அபிவிருத்தி வட்டாரத்திற்கு யூனியன் ஏற்படுத்துவதால் ஏற்படும் விளைவு. (i) பஞ்சாயத்துச் சட்டத்தின் 11, 12 பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு அ பி வி ரு த் தி வட்டாரத்திற்கும், ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஏற்படுத்தப்பட்டால், அது சொந்த அலுவலகம் ஒன்றைக் கொண்டிருக்கும். மேற்படி சட்டத்தின்கீழ் ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தின் சாதாரண வருமானம், பொது நிதியின்கீழும், ஆரம்பக் கல்வி நிதியின்கீழும் சுமார் 3 முதல் 4 லட்சம் ரூபாயாக இருக்கும். அந்த நிதிகளுக்கு சம்பந்தப்பட்ட வேலேயைச் செய்ய, ஒரு சாதாரண, இரண்டாம் தர நகராட்சிக்கு அனு மதிக்கப்படும் ஊழியர் தேவைப்படுவர். (ii) மேற்படி சட்டத்தின் 66-வது பிரிவின் கீழ், சமுதாய அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்றும் வேலே அதனிடம் ஒப்படைக்கப்படும்போது, வட்டrர அபிவிருத்தி அதிகாரியின்கீழும், பஞ்சாயத்து யூனியன் அதிகாரியின் கீழும், உள்ள வட்டார அபிவிருத்தி அலுவலகம் ஒரே அலுவலகமாக இணைக்கப்பட வேண்டும். (iii) பின்னர் அடியிற் கண்டவற்றைக் குறிப்பிடுவது அவசியமாகும்: (a) வளர்ச்சிப் பணியாளர்களில் யார், யார் இருப்பர் (அவர்களது சேவைகள் அலுவலகக் காரியங்களுக்காக பஞ்சாயத்து யூனியனுக்கு இலவசமாக விடப்படும்), பஞ்சா யத்து யூனியன் ஊழியர்களில் ங்ார், யார் இருப்பர்;