உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351 தக்க தொழில்கள் விஷயமாய் மேல்விசாரணை செய்வது குறித்தோ அவைகளுக்குக் கட்டணங்க ள் விதித்து வாங்குவது குறித்தோ 1-ம் வகை (நகரப்) பஞ்சாயத்துக்கும் 11-ம் வகை கிராமப் பஞ்சாயத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் கற்பிக்கப்படவில்லை ? 1958-ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் உள்ள நிலேமை வருமாறு : பஞ்சாயத்துக் கிராம்த்தின் விஷயத்தில், அடியிற். கண்டவாறு அறிக்கையிட பஞ்சாயத்து யூனியன் மன்றம் அதிகாரம் வாய்ந்ததாகும். தனது அதிகார வரம்பிலுள்ள ஏதாவது ஒரு பஞ்சாயத்துக் கிராமத்தின் எல்லேக்குள் அல்லது அந்த அறிக்கையில் குறிப்பிடக்கூடிய பஞ்சாயத்துக் கிராமத்தின் அல்லது கிராமங்களின் எல்லைகளுக்குள் இருக்கிற எந்த இடத்தையும் அபாயகரமானது அல்லது தீங்கு உண்டாக்கத்தக்கது என அரசாங்கத்தினர் குறிப்பிடும் காரியங்கள் எதற்காகவும் லேசென்ஸ் இல்லாமல் பயன்படுத் தக்கூடாது. லேசென்ஸ் கொடுப்பதற்கு அல்லது மறுப்பதற்கு பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் அதிகாரம் வாய்ந்த அதிகாரியாவார். நகரப் பஞ்சாயத்தின் விஷயத்தில், மேலே குறிப்பிட்ட அறிவிப்பு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தே அதிகாரம் வாய்ந்ததாகும். அதன் நிர்வாக அதிகாரி மேற்படி லேசென்ஸ் கொடுக்க அல்லது மறுக்க அதிகாரம் வாய்ந்த அதிகாரியாவார். 3. லேசென்ஸ் கட்டணங்களேப் பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் விதித்து வாங்கியபோதிலும், அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை, பஞ்சாயத்துக் கிராமங்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து நிதிக்கும் நகரப் பஞ்சாயத்துகள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நகரப் பஞ்சாயத்து நிதிக்கும் இப்போது செய்வதைப் போலவே வரவு வைக்க வேண்டும். 4. 1950-ம் ஆண்டு கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் 126-வது பிரிவின்கீழ், அரசாங்க உத்தரவை (L.A. எண் 940 -ே5-1959) அனுசரித்து, மேற்படி சட்டத்தின் 91-வது 92-வது பிரிவுகளினுல் சில பஞ்சாயத்துகளுக்குக் கொடுக்கப்பட்ட அலுவல்களைச் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகமும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றலாம்.